/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/52_76.jpg)
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் காவல் சரகம் குளமங்கலம் தெற்கு கிராமத்தில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத குளக்கரை அருகே சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்த பகுதியில் ஒரு மனித எலும்புகள் சிதறிக் கிடப்பதாக கீரமங்கலம் போலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த கீரமங்கலம் போலீசார் எலும்புகள் கிடந்த இடத்தில் ஆய்வு செய்த போது ஒரு வேட்டி, துண்டு கிடந்துள்ளது. மேலும் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தது. இது ஒரு ஆண் உடலில் உள்ள எலும்புகளாக இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் சிதறிக்கிடந்த எலும்புகளையும் வேட்டி, துண்டு ஆகியவற்றை சேகரித்த போலீசார் சோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், அந்தப் பகுதியில் ஏற்கனவே யாரும் காணாமல் போய் உள்ளனரா? காணாமல் போனவர் பயன்படுத்திய துண்டு, வேட்டி இது தானா? என்று விசாரணையை தொடங்கியுள்ளனர். இதே பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு ஒருவர் காணாமல் போய் கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் பதிவாகி உள்ள நிலையில் தற்போது எலும்புக்கூடுகளாகக் கண்டுபிடிக்கப்பட்டது அவராக இருக்குமா என்றெல்லாம் விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)