Hugs will remove the evil Astrologer  sathiyamoorthy arrested

Advertisment

தர்மபுரி அருகே, நீண்ட நேரம் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தால் தோஷம் நீங்கிவிடும் எனக் கூறி, வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஜோதிடரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல் நத்தம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (42),ஜோதிடர். இவர், அடிக்கடி தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி ஆகிய பகுதிகளுக்கு வந்து ஜோதிடம் கூறிச்செல்வது வழக்கம். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, அதியமான்கோட்டைக்கு வந்தார். அவரிடம் அதியமான் நகரைச் சேர்ந்த 35 வயதுள்ள பெண் ஒருவர் ஜோதிடம் பார்த்துள்ளார்.

அந்தப் பெண்ணின் ஜாதகத்தைக் கணித்துப் பலன்களைக் கூறிய சத்தியமூர்த்தி, சனிப்பெயர்ச்சியால் ஜாதகத்தில் தோஷம் ஏற்பட்டுள்ளதாகவும், சில சிறப்பு பரிகாரங்கள் செய்தால் தோஷம் நீங்கிவிடும் என்றும், அதற்குக் கொஞ்சம் பணம் செலவாகும் என்றும் கூறியுள்ளார்.

Advertisment

தோஷம் இருப்பதாகக் கூறியதால் பயந்து போன அந்தப் பெண், பரிகார நிவர்த்திக்காக ஜோதிடரிடம் 6 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிக்கொண்டு சென்ற ஜோதிடர், பிப். 15ம் தேதி மீண்டும் அதியமான் நகருக்கு வந்தார். அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்றார். வீட்டில் அந்தப் பெண் மட்டும் இருந்தார். அப்போது சத்தியமூர்த்தி, அந்தப் பெண்ணின் ஜாதகத்தில் இன்னொரு தோஷம் இருப்பதாகவும், இருவரும் நீண்ட நேரம் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தால் தோஷம் நீங்கிவிடும் எனக் கூறியவாறே, திடீரென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றார்.

அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் கூச்சல் போட்டார். அதைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு சென்று அவரை மீட்டனர். ஜோதிடரைப் பிடித்துச்சென்று அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.