Advertisment

ஆடுகள் அமோகமாக விற்பனை; ஆர்வமுடன் வாங்கிச் செல்லும் வியாபாரிகள்!

Huge sale of goats ahead of Diwali

தீபாவளி பண்டிகை வரும் 31 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளதால்,அதற்குப்பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். புத்தாடைகள், வெடி, நகைகள் என புதிய பொருட்களை வாங்கக் கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

Advertisment

இந்த நிலையில், தீபாவளி பண்டிகை நெருங்குவதால் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சந்தைக்கோடியூர் சந்தை மைதானத்தில் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும், திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்தும் பல்வேறு இடங்களில் இருந்த நூற்றுக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளது.

Advertisment

அருகில் உள்ள பொன்னேரி, ஏலகிரிமலை, நாட்றம்பள்ளி, மண்டலவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் ஆடுகள் வாங்கக் குவிந்தனர். 3 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை ரகத்திற்கு ஏற்ப ஆடுகள் விலை போனது. இதில் ஏராளமான வியாபாரிகள் தீபாவளி பண்டிகை ஒட்டி ஆடுகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

diwali goat
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe