Advertisment

அனைத்திற்கும் பதில் வரும்;பொய்கள் தோலுரிக்கப்படும்-ஹெச்.ராஜா ட்விட்!!

புதியக்கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா எழுப்பியிருக்கும் கேள்விகள் அனைத்திற்கும் பதில் வரும் என் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Advertisment

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா, 'மூன்று வயதிலேயே மூன்று மொழிக்கல்வி திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் இதனை எப்படி சமாளிக்கப்போகிறார்கள்..?'' எனக் கூறியிருந்தார்.

Advertisment

surya

சூர்யாவின் பேச்சுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் கடுமையாக சாடியிருந்தனர். அதேபோல், சூர்யாவின் பேச்சுக்கு ஆதரவாக சீமான், டிடிவி.தினகரன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர்.

surya

அண்மையில்மதுரை உசிலம்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியபாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, புதிய கல்விகொள்கையை விமர்சித்து பேசியிருக்கும் நடிகர் சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது எனவும் பேசியிருந்தார். இந்நிலையில் நடிகர் சூர்யா முன்வைக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் டுவிட்டரில் ஹெச்.ராஜா ''அனைத்திற்கும் பதில் வரும் இது துவக்கம். பொய்கள் தோலுரிக்கப்படும்'' எனபதிவிட்டுள்ளார்.

NEW EDUCATION POLICY Surya
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe