Advertisment

"டூரிஸ்ட் வேன் பாக்கி தராத எச்.ராஜாவுக்கு ட்விட்டர் ஒரு கேடா?" -பெருமை பேசியதற்கு பதிலடி!

ஒருவர் எவ்வளவு பெரிய வி.ஐ.பி.யாக இருந்தாலும், அவரை சாமானியர்களும் ‘நோஸ்-கட்’ செய்துவிடக்கூடிய காலம் இது!

Advertisment

h raja

பா.ஜ.க. தேசிய செயலர் ராஜா, மத்திய பா.ஜ.க. அரசுக்குப் பெருமை சேர்ப்பதாக எண்ணி ‘காவிரி மேலாண்மை வாரியம் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சம்மதம். 50 ஆண்டுகால திமுகவின் துரோகத்திலிருந்து தமிழகம் காப்பாற்றப்பட்டது’ என்று ட்விட் செய்திருக்கிறார்.

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

இந்தப் பதிவுக்கு இப்படி ஒரு பதில் வரும் என்று எச்.ராஜா எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆம். கண்ணன் என்பவர் ‘காவேரி மேலாண்மை அமைக்குறது அப்புறம்.. நீ காரைக்குடியில் மருந்துக்கடை வச்சிருக்கும்போது, தஞ்சாவூரில் உள்ள ஒன்பது நவகிரக கோவில்களுக்கு போறதுக்கு, டூரிஸ்ட் வேன் எடுத்தியே ஞாபகம் இருக்கா? அதுக்கு வாடகை எப்ப தருவ? சொல்லுடா நாயே!’ என்று எச்.ராஜாவின் ட்விட்டுக்கு ரிப்ளை பண்ணியிருக்கிறார்.

twitter snapshot

எச்.ராஜா, காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மார் தட்டியிருப்பது அரசியல். கண்ணன், டூரிஸ்ட் வேன் வாடகை பாக்கியை ட்விட்டர் பதிலாக, பொதுவெளியில், அதுவும் அநாகரீகமாக கேட்பது சொந்த விஷயம். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறார் கண்ணன் என்ற பதிவர். உண்மையிலேயே, எச்.ராஜா டூரிஸ்ட் வேன் பாக்கி வைத்திருக்கிறாரா? இல்லையா? என்பதை அவர் மட்டுமே அறிவார். இதை ஒரு விவகாரமாக்கி, ‘எச்.ராஜாவெல்லாம் காவேரி மேலாண்மை வாரியம் குறித்து எப்படி பேசலாம்? ட்விட்டரில் கருத்து கூற இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? முதலில் டூரிஸ்ட் வேன் வாடகை பாக்கியை செட்டில் செய்துவிட்டு, அப்புறம் ஊர் நியாயம், உலக நியாயம் பேசட்டும்’ என்கிற ரீதியில், பதிலடி தருவதெல்லாம்ரொம்ப அதிகம். கருத்துச் சுதந்திரத்தை ஆளாளுக்கு உருட்டி விளையாடுகின்றனர்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

எச்.ராஜாவும் சாதாரண ஆளில்லை. ட்விட்டர் சர்ச்சைகளில் சிக்கும்பொழுது 'என் அனுமதியில்லாமல் அட்மின் பதிவு செய்துவிட்டார்' என்று சொல்வது அவரது வழக்கம். டூரிஸ்ட் வேன் பாக்கியைக் கண்ணன் கேட்டதற்கு என்ன பதில் வைத்திருக்கிறாரோ?

funny twitter
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe