கன்னியாகுமரி மாவட்டம் மேல்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா, மத்திய அரசும், மாநில அரசும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களைத் துடைக்க துணைநிற்கும் எனக் கூறினார்.

மேலும்அவர் பேசுகையில்,

Advertisment

இன்று காலையில் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் விவசாய அமைச்சர் ராதா மோகன் சிங் அவரோடு பேசிய பொழுது உடனடியாக நாளை மத்திய அரசாங்கத்தின் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை வரவைத்து ஊடுபயிர், சூழ்நிலைகள், மண்ணுடைய தன்மை பார்த்து எந்த ஊடுபயிர் பயிர் செய்தால் பலன் பெற முடியும் என்பது பற்றிய ஆலோசனைகளை தர உள்ளனர்.

hraja

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இதைத்தவிர வடகாடு, நெடுவாசல் போன்ற பகுதிகள் எல்லாம் கேரளா சூழலில் பசுமையாக இருக்கும். ஆனால் தற்போது புயல் பாதிப்பு காரணங்களால் அவை சோர்விழந்து நிற்கிறது.நான்கு நாட்களுக்கு முன் தமிழக முதல்வரைஇதுதொடர்பாக சந்தித்தேன். கஜா புயலில் முறிந்தஅனைத்து வகை மரங்களுக்கான இழப்பீடுகள் பற்றிமுடிவெடுக்கலாம் என சொல்லி இருக்கிறார்கள். எனவே மத்திய அரசும், மாநில அரசும் கஜாபாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயர் துடைக்க துணை நிற்கும்எனவே விவசாயிகள் தங்களது மனோபலத்தை கைவிட வேண்டாம்.

அதேபோல் பொன்மாணிக்கவேல் அவர்கள் பணி ஓய்வு பெறுவதாக இருந்தநிலையில் இன்று உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் நீதிபதி ஆதிகேசவன் ஆகியோரின் அமர்வு பொன் மாணிக்கவேலைசிறப்பு புலனாய்வு அதிகாரியாக நியமித்து உள்ளது. இதனைபாரதிய ஜனதா கட்சி மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.

கடந்த காலத்தில் பல்லாயிரம் சிலைகள் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மா பா பாண்டியராஜன்கூடசொல்லியிருந்தார் வெளிநாட்டில் உள்ள சிலைகளை கொண்டு வருவதில் சிரமம் என்னவென்றால் அது எந்த கோயிலைச் சேர்ந்த சிலை என்பதற்கான ரெக்கார்ட் இல்லை என்பதுதான்.எனவே தான் சொல்கிறேன் இந்து அறநிலையத் துறை என்பது இந்துக்களை அழிக்கும் துறை. இப்படியாக இந்துக்களை அழிக்கும் துறையாக அறநிலைத்துறை இருப்பது மிகவும் வருத்தத்தை தருகிறது என்றார்.