Skip to main content

1971 மீண்டும் திரும்புகிறது;காலிகள் புரிந்துகொள்ளட்டும்! கி.வீரமணி

Published on 08/04/2019 | Edited on 08/04/2019

 


அண்ணா பெயரில் கட்சியை, ஆட்சியை வைத்திருக்கும் அண்ணா தி.மு.க. ஆட்சியில் பெரியார் சிலைகள் உடைக்கப்பட்டு வருகின்றன. பா.ஜ.க.வுக்கு அடகு வைக்கப்பட்ட ஆட்சி இது.  1971 மீண்டும் திரும்புகிறது; பெரியார் வெறும் கற்சிலையல்ல; இனவுணர்வு எரிமலை என்பதை தேர்தலில் காட்டுங்கள் என்று திராவிடர்  கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அறிக்கை விடுத்துள்ளார்.


பா.ஜ.க.வின் கூட்டணி என்று தான் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியினருக்கு உத்தரவு பிறப்பித்தார் பா.ஜ.க தலைவர் அமித்ஷா. மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் கைகட்டி வாய்ப் பொத்தி நின்றனர் அதிமுக என்ற டில்லியின் கொத்தடிமைகள்.

 

p

 

தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத  காவி கூட்டத்தினர்!

அந்தக் கூட்டணியின் சார்பில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதியான இராமநாதபுரம் தொகுதிக்கு உட்பட்ட அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலையை நேற்றிரவு உடைத்திருக்கிறார்கள் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத காவி கூட்டத்தினர்.


சிவகங்கை தொகுதி பா.ஜ.க. வேட்பாளரான எச். ராஜா என்ற நரகல் நடையழகர் “பெரியார் சிலையை உடைப்போம்“ என்றதைத் தொடர்ந்து, (7.3.2018) திருப்பத்தூரில் பா.ஜ.கவின் பொறுப்பாளர் சம்மட்டி சகிதம் சென்று பெரியார் சிலையை உடைத்தவுடன், பொதுமக்களே பிடித்துத் தந்தனர். அதுபோலவே ஆலங்குடியில், புதுக்கோட்டை விடுதியிலும் நடந்தது (2018, மார்ச்).


தந்தை பெரியார் பிறந்த நாளில் சென்னையில் பாஜகவின் வக்கீல் என்ற பேர்வழி ஒருவர் பெரியார்சிலை மீது செருப்பை வீசி, பிடிபட்டு சிறை தண்டனை பெற்றார். அதே நாளில் தாராபுரத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒருவர் தந்தை பெரியார் சிலைக்கு மேல் ஷூவை வைத்து பிடிபட்டு சிறைக்கு அனுப்பப்பட்டு, உயர்நீதிமன்றத்தில் ‘தனக்கு பைத்தியம்‘ என்று சான்றிதழ் வாங்கி, வெளியே வந்து நொந்து கிடக்கிறார்.


இரவு நேர வீராதி வீரர்கள்!
இந்த தேர்தல் நேரத்தில் இப்படி செய்வது வேறு யாராக இருக்க முடியும்? இந்த ‘‘இரவு நேர வீராதி வீரர்களைத்’’ தவிர, வேறு யார்?
தேர்தலில் தோல்வி பயம் உச்சக்கட்டத்தை அடைவதால் குழம்பிப்போய் இத்தகைய இழி செயல்களை இந்த இழி மக்கள் செய்கின்றனர்.
எல்லா ஊர்களிலும் உள்ள தந்தை பெரியார் சிலைகளையும் இதுபோல தேர்தலுக்கு முன்பே உடைத்து ‘‘திருப்பணி’’களை  ஆற்றட்டும்! ஆற்றட்டும்!!
அப்போது தான் ஏற்கெனவே நோட்டாவை விட கீழே வாக்கு வாங்கிய கும்பல் அடியோடு படுதோல்வியை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்.

 

ஆரியம் என்றாலும் 
பாஜக  - ஆர்எஸ்எஸ் என்றாலும் ஒன்றுதான்!

தந்தை பெரியாரைப் பொறுத்தவரை 1971 தேர்தலில் திண்டுக்கல் போன்ற ஊர்களில் அவர் சிலையைத் தகர்க்க, படத்தை எரிக்க இதே ஆரியம் முயற்சித்தபோது (ஆரியம் என்றாலும், பாஜக  - ஆர்எஸ்எஸ் என்றாலும் ஒன்றுதான்!) தந்தை பெரியார் அவர்கள் அறிக்கை விட்டார். ‘‘நானே என் படத்தை அச்சிட்டு வழங்குகிறேன்; கொளுத்துங்க’’ என்று கூறி 1971 தேர்தலில் திமுகவுக்கு மகத்தான வெற்றியைத் தேடித் தந்தவர் எம் தலைவர் தந்தை பெரியார்.
திராவிடத் தமிழ் இனத்தை ஒன்று திரட்ட இத்தகைய இழிவானவர்களின் இழி செயல்கள்,  ‘வயல்களில் பயிர் வளர’ நல்ல உரங்களாகவே பயன்படும்.
அண்ணா திமுக ஆட்சி என்பது, மோடி ஆட்சியிடம் தமிழ்நாட்டை , தமிழர் நலனை, உரிமைகளை அடகு வைத்துவிட்டது; இத்தகைய ஆட்சியில் இந்தத் ‘துணிச்சல்’ வந்திருக்கிறது.. ஆட்டம் போடுகிறார்கள்! குற்றவாளிகள் சுதந்திரமாக உலவுகிறார்கள்.

 

p

 

அண்ணாவின் பெயர் அவர்களுக்கு 
ஒரு தேர்தல் வியாபார முத்திரையே!

‘நான் கண்ட கொண்ட ஒரே தலைவர் பெரியார்!’ என்ற அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்துக்கொண்டவர்களுக்குப் பெரியார் சிலை உடைபடும்போது ஏற்படவேண்டிய உணர்வு ஏற்படவில்லை - ஒரு கண்டனம் கூடத் தெரிவிக்க இயலாத பா.ஜ.க. அடிமை ஆட்சியாக மாறிவிட்டது; திசை திருப்பும் வேலையில் ஈடுபட்டு வருகிறது;  அண்ணா இவர்களுக்கு ஒரு தேர்தல் வியாபார முத்திரை - அவ்வளவுதான்.
தந்தை பெரியாரை அவமதித்தோர் மீது நடவடிக்கை எடுக்கும் துப்பு இல்லை. அவர்களைக் காப்பாற்றும் துரோக வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

தமிழக ஆட்சியின் நிலை வெட்கக்கேடானது!

கன்னியாகுமரியில் ஆர்எஸ்எஸ்.காரர்களைக் கொண்டு வந்து இறக்கி கலவரம் செய்யத் திட்டமிடுகின்றனர் என்று காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் நேற்று கூறியுள்ளார்.
எங்கெங்கெல்லாம் பா.ஜ.க வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்களோ, அந்தந்த தொகுதிகளில் தேர்தலுக்குள் கலவரம் வெடித்தாலும் கூட அதிசயமில்லை. தமிழக ஆட்சியின் நிலை வெட்கக்கேடானது!


வாக்காளர்களான தமிழ் இனமான உணர்வாளர்களே, இவர்களுக்குப் பாடம் கற்பிக்க சரியான ஒரே வழி - ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் பொதுத் தேர்தலில் திமுகவின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற - சட்டமன்ற வேட்பாளர்கள் அனைவருக்கும் வாக்களித்து வெற்றி பெறச் செய்வதுதான்.


இன்றைய நிலையில் தந்தை பெரியார் அவர்களின் அறிவுரை இதுவாகத்தான் இருக்கும். இருக்கவும் வேண்டும்.
பெரியார் வெறும் கற்சிலை அல்ல; 
இன உணர்வு எரிமலை!
‘எங்களுக்கு உயிர் வெல்லம் அல்ல; உயிர்த் தியாகமும் தேவை என்றால் தருவதற்குத் தயார் பெரியாரின் ராணுவம்‘ - எதிரிகள் புரிந்துகொள்ளட்டும்!
‘‘பெரியார் வெறும் கற்சிலை அல்ல; இன உணர்வு எரிமலை’’ என்று கயவர்கள், காலிகள் புரிந்து கொள்ளட்டும்!

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைப்பிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.