திமுக நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு முன் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்துவேன்-ஹெச்.ராஜா

நாடு முழுவதும் ஒரு மொழி என்பது மிகவும் அவசியம், அதுதான் உலகளவில் இந்தியாவிற்கான அடையாளத்தை தரும் எனவும், அதிக மக்களால் பேசப்படும் இந்தி மொழிதான் அதைஅடைவதற்குரிய மொழி எனவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளநிலையில், தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் அதற்கான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

h.raja interview

நேற்று அண்ணா பிறந்தநாள் விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் கண் அசந்தால் இந்தியை திணிக்க முற்படுகிறார்கள் எனவே இன்னொரு மொழிப்போருக்கு தயாராக இருக்க வேண்டும்எனக்கூறியிருந்தார். அதேபோல் நேற்று திருவண்ணாமலையில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் பேசிய அவர், எந்த தியாகத்தை செய்தும் இந்தி திணிப்பைதிமுக எதிர்கொள்ளும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் விழுப்புரம் திருக்கோவிலூரில் செய்தியாளர்களை சந்தித்தபாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா,

தமிழகத்தில் திமுகதான் இந்தி திணிப்பு செய்வதாக கூறிய அவர்,திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகள் முன்பு இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்துவேன் எனக்கூறினார்.

protest stalin
இதையும் படியுங்கள்
Subscribe