நாளை தேர்தல் முடிவுகள் வெளிவர உள்ள நிலையில் இன்று அறந்தாங்கி வந்த சிவகங்கை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்த போது,
எங்கெல்லாம் நேரடியாக போட்டி நடக்கிறதோ அங்கெல்லாம் கருத்துக்கணிப்புகள் சரியா உள்ளது. ஆனால் தமிழகம் போன்றஇடங்களில் சரியாக அந்த நிறுவனங்களால் கணிக்க முடியவில்லை. தினகரன் சில தொகுதிகளில் 6 சதவிகிதம் ஓட்டும், மற்ற இடங்களில் 2முதல் 4 வரை வாக்கு வாங்குவார் என்ற அடிப்படையில் கணிப்புகள் சரியாக இல்லை.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
கடைசியாக நடந்த 4 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளுக்கும் நான் சென்றிருந்தேன். அந்த இடங்களில் கடைசி நேரங்களில் கமலஹாசன் ஒரு நல்லது செய்துவிட்டார். அதாவது இஸ்லாமியர்கள் பகுதியில் போய் அவர் பேசிய பேச்சு எங்கள் கூட்டணிக்கு சாதகமாகிவிட்டது. அவர் கிருஸ்தவர். அவர் போய் இந்து பற்றி பேச எந்த அருகதையும் இல்லை.
ஆர்.கே. நகரில் தி.மு.க ஜெயிக்கும் என்று ஊடகங்கள் சொன்ன கணிப்பு மாறியதல்லவா? 19 ந் தேதி நடந்த 4 தொகுதியும் அ.தி.மு.க தான் ஜெயிக்கும். தமிழ்நாட்டில் தினகரன் அணிக்கு ஒரு எம்பி, ஒரு எம்.எல்.ஏ தொகுதி கிடைக்காது. அதனால இந்த ஆட்சிக்கு பாதிப்பு வராது.
எனக்கு தெரிந்த வரை முக.ஸ்டாலின் பாஜகவுடன் பேசிவரவில்லை. அப்படியே அவர் வந்தாலும் பா.ஜ.க அவரை ஏற்றுக்கொள்ளாது. அவர் எதுக்கு தேவை.. இந்து சனாதனதர்மத்தை வேர் அறுக்கவா? திருமணத்தில் ஹோமத்தில் வரும் புகையால் கண் எரியும் கண்ணீர் வரும் என்று பேசும் இந்து விரோதிகளை சேர்க்க மாட்டோம் எனக்கூறினார்.