Advertisment

ஸ்டாலின் மக்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குகிறார்... ஹெச்.ராஜா பேட்டி!!

மதுரையில்செய்தியாளர்களை சந்தித்தபாஜகதேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேசுகையில்,

Advertisment

"திமுகவும் அதனுடைய இலவச இணைப்புகளும் சேர்த்து தமிழகத்தில் மத ரீதியான தாக்குதலை நடத்தி வருகின்றனர். ஒரு மசோதாவை ஆதரித்து அல்லது எதிர்த்து வாக்களிக்க மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிமை உண்டு.சீமான் சிவ வழிபாட்டை கொச்சைப்படுத்தி வருகிறார்.இந்து மதத்திற்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் விதிமுறைக்கு புறம்பாக நடந்த கோவில் அதிகாரியை சஸ்பெண்ட் செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும், திமுகவுக்கு அரசியல் அறிவு இல்லாததால் பிரசாந்த் கிசோரை அழைத்து வந்துள்ளது. தேர்தலுக்காக திமுக நாடகம் நடத்தி வருகிறது.

H.RAJA INTERVIEW I MADURAI

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

திமுக அரசியலுக்கு சி.ஏ.ஏ என்கிற போர்வையை கையில் எடுத்து உள்ளது. ஸ்ரீரங்கத்தில் பொட்டை அளித்த திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்து கோவில்களில் தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என செல்பவர்கள் பள்ளிவாசலில் தமிழில் வழிபாடு நடத்த முடியும், தமிழை காட்டுமிராண்டி மொழி என கூறிய பெரியார் தமிழின துரோகி, ஊடகங்கள் அனைத்துயும் புரிந்து கொண்டு கேள்வி கேட்க வேண்டும்.சீமான் மதில் மேல் பூனையாக பேசி வருகிறார்.இந்து கோவில்களில் தமிழ் மொழியில் தான் வழிபாடு நடத்தப்படுகிறது. இந்து மதத்தை அழிக்க கார்டு வெல் தலைமையில் கூட்டம் செயல்பட்டு வருகிறது.

நெய்வேலியில் சீனிமா படப்பிடிப்பில் ஏற்கனவே விபத்து நடந்ததால் விஜய் படப்பிடிப்பு நடத்த கூடாது என செல்கிறோம், காஷ்மீரில் மக்கள் சுதந்திர காற்றை சுவாசித்து வருகின்றனர். தமிழகத்தில் பாஜக தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார். மோடி பிரதமராக பொற்றுப்பேற்ற பின்னர் இலங்கையில் ஒரு தமிழர் கொல்லப்படவில்லை, வருமானவரித்துறை சுயட்சையாக செயல்பட்டு வருகிறது.

சினிமாத்துறையில் கருப்பு பணம் உள்ளது, சரஸ்வதி நதி இருந்தது நிரூபிக்கப்பட்டது.கால போக்கில் மறைந்து விட்டது.அந்த அடிப்படையில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். கீழடியில் அகழ்வாராய்ச்சியை விரிவுபடுத்த வேண்டும்" என கூறினார்.

thanjai periyakovil seeman Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe