Skip to main content

ஸ்டாலின் மக்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குகிறார்... ஹெச்.ராஜா பேட்டி!!

Published on 09/02/2020 | Edited on 09/02/2020

 மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேசுகையில்,

"திமுகவும் அதனுடைய இலவச இணைப்புகளும் சேர்த்து தமிழகத்தில் மத ரீதியான தாக்குதலை நடத்தி வருகின்றனர். ஒரு மசோதாவை ஆதரித்து அல்லது எதிர்த்து வாக்களிக்க மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிமை உண்டு. சீமான் சிவ வழிபாட்டை கொச்சைப்படுத்தி வருகிறார். இந்து மதத்திற்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் விதிமுறைக்கு புறம்பாக நடந்த கோவில் அதிகாரியை சஸ்பெண்ட் செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும், திமுகவுக்கு அரசியல் அறிவு இல்லாததால் பிரசாந்த் கிசோரை அழைத்து வந்துள்ளது. தேர்தலுக்காக திமுக நாடகம் நடத்தி வருகிறது. 

 

H.RAJA INTERVIEW I MADURAI

 

திமுக அரசியலுக்கு சி.ஏ.ஏ என்கிற போர்வையை கையில் எடுத்து உள்ளது. ஸ்ரீரங்கத்தில் பொட்டை அளித்த திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்து கோவில்களில் தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என செல்பவர்கள் பள்ளிவாசலில் தமிழில் வழிபாடு நடத்த முடியும், தமிழை காட்டுமிராண்டி மொழி என கூறிய பெரியார் தமிழின துரோகி, ஊடகங்கள் அனைத்துயும் புரிந்து கொண்டு கேள்வி கேட்க வேண்டும். சீமான் மதில் மேல் பூனையாக பேசி வருகிறார். இந்து கோவில்களில் தமிழ் மொழியில் தான் வழிபாடு நடத்தப்படுகிறது. இந்து மதத்தை அழிக்க கார்டு வெல் தலைமையில் கூட்டம் செயல்பட்டு வருகிறது. 

நெய்வேலியில் சீனிமா படப்பிடிப்பில் ஏற்கனவே விபத்து நடந்ததால் விஜய் படப்பிடிப்பு நடத்த கூடாது என செல்கிறோம், காஷ்மீரில் மக்கள் சுதந்திர காற்றை சுவாசித்து வருகின்றனர்.  தமிழகத்தில் பாஜக தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார். மோடி பிரதமராக பொற்றுப்பேற்ற பின்னர் இலங்கையில் ஒரு தமிழர் கொல்லப்படவில்லை, வருமானவரித்துறை சுயட்சையாக செயல்பட்டு வருகிறது.

சினிமாத்துறையில் கருப்பு பணம் உள்ளது, சரஸ்வதி நதி இருந்தது நிரூபிக்கப்பட்டது. கால போக்கில் மறைந்து விட்டது. அந்த அடிப்படையில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். கீழடியில் அகழ்வாராய்ச்சியை விரிவுபடுத்த வேண்டும்" என கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

10 மாவட்டங்களுக்கு மழை அலர்ட் 

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
nn

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருக்கும் கேரளாவில் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நள்ளிரவு ஒரு மணி வரை 10 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி கோவை, நீலகிரி, தேனி, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, மதுரை, திருநெல்வேலி ஆகிய 10 மாவட்டங்களில் நள்ளிரவு ஒரு மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

'தேர்வை ரத்து செய்வதற்கு பதிலாக பாஜக ஆட்சியை ரத்து செய்யலாம்' - அகிலேஷ் கருத்து

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
'Instead of canceling the election, we can cancel the BJP rule' - Akhilesh's opinion

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

நீட், நெட் தேர்வு முறைகேடு புகார்கள் தொடர்ந்து தேசிய தேர்வு முகமையின் தலைவர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார். தேசிய தேர்வு முகமையின் தலைவராக இருந்த சுபேத்குமார் சிங்கை நீக்கி புதிய தலைவராக பிரதீப் சிங் கரோலா நியமிக்கப்பட்டார். நுழைவுத் தேர்வில் வெளிப்படைத்தன்மை கொண்டுவர உயர்மட்ட குழு அமைக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. நீட் தேர்வு ரத்து குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,'முதுநிலை நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மிகுந்த விரக்தி அடைந்துள்ளனர். இது திடீரென நடக்கும் நிகழ்வல்ல. மத்திய தேர்வு முகமையின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணி. மாணவர்களின் எதிர்காலத்திற்காக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மருத்துவம் உள்ளிட்ட தொழில்முறை படிப்புகளில் நேர்மையான, சமமான தேர்வு முறையை கொண்டு வர வேண்டும்' என வலியுறுத்தி இருந்தார்.

nn

இந்நிலையில் இதேபோல சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ள கருத்தில், 'தேர்வுகளை ரத்து செய்வதற்கு பதிலாக பாஜக அரசை ரத்து செய்யலாம் என மக்கள் சொல்கிறார்கள்' எனக் கருத்து தெரிவித்துள்ளார்.