Advertisment

1967 போல் நாங்கள் சும்மா இருக்கமாட்டோம்; எச்சரிக்கும் எச்.ராஜா...

"திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக தலைவர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், போன்றவர்வர்களுக்கு ஒரு விஷயத்தை நாங்கள் தெளிவு படுத்துகிறோம். அவர்கள் நினைப்பதுபோல் இது 1967 இல்லை. திமுக இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தொடங்கினால் நாங்கள் சும்மா இருக்கமாட்டோம், நாங்களும் போராட்டம் நடத்துவோம்," என்கிறார் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா.

Advertisment

h.raja about hindi imposition

நாகை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்ற விழா ஒன்றிற்கு வந்திருந்த எச், ராஜா பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகையில்," இந்தி தேசிய மொழியாக அறிவிக்கப்பட்ட தினம் ஆண்டுதோறும் இந்தி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது தேசிய மொழியான இந்தியை நாடு முழுவதும் வளர்ப்பதற்கு உறுதி பூண்டுள்ளோம் என பேசிய ஆதாரம் என்னிடம் உள்ளது. பாஜக தலைவர் அமித்ஷா பேசிய பேச்சு அற்புதமானது. பல்வேறு மொழிகள் இந்த தேசத்தில் இருந்தாலும் ஒவ்வொரு மொழியும் சிறப்பானது என பேசினார். இதில் தமிழ் மொழிக்கு எங்கு அவமானம் அவமதிப்பு இருக்கிறது. தமிழகத்தில் மொழி ரீதியிலான பிரச்சினையை தூண்ட நினைக்கிறார்கள். மு,க,ஸ்டாலின் வைகோ, திருமாவளவன் போன்றவர்களுக்கு ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்துகிறேன். 1967 போல் திமுக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தால் நாங்கள் சும்மா இருக்கமாட்டோம் பாஜக சார்பில் தொடர் போராட்டம் நடத்துவோம். 1967 போல் நாங்கள் இருக்கமாட்டோர். தேசிய சிந்தனையாளர்களாகிய நாங்கள் வீதிக்கு வந்து திமுகவினர் நடத்தும் பள்ளிக்கூடங்களை சமச்சீர்கல்வி ஆக மாற்றும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்," என்றார்.

Hindi imposition h.raja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe