Advertisment

எச்.ராஜா பற்றிய கேள்வி.... பதில் சொல்ல மறுத்த அமைச்சர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தி யாளர்களிடம் பேசினார்.

Advertisment

b

அப்போது அவர், "கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் சேதமடைந்த பள்ளிகளுக்கு பதிலாக அங்குள்ள சில வீடுகளில் பள்ளிக்கூடங்கள் நடைபெற்று வருகிறது.

கோபிசெட்டிபாளையத்தில் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் ஈஸ்வரன் கேட்கிறார், அந்த ஈஸ்வரனைப் போன்றவர்கள் கோரிக்கை வைப்பது மிக சுலபம். காரியம் செய்வது கடினமானது . அவர் வேண்டுமானாலும் கோபிசெட்டிபாளையம் நகரின் மையப்பகுதியில் 100 ஏக்கர் நிலம் எடுத்து தரட்டும், அப்புறம் அது பற்றி யோசிப்போம்." என்றார்.

Advertisment

b

மத அடையாளங்களை பள்ளிக்கு அணிந்து வரக்கூடாது என சுற்றறிக்கை விடுத்தது பற்றி கூறும் போது, "பள்ளிகளில் இதுபோன்ற நிலை இல்லை. இந்த சுற்றறிக்கை அனுப்பிய சம்பந்தப்பட்ட துறை எங்களிடம் கலந்து ஆலோசிக்கவில்லை. இதன் காரணமாக இந்த குழப்பம் ஏற்பட்டது. அந்த சுற்றறிக்கை எங்களை கலந்தாலோசிக்காமல் அப்படியே முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டது. எந்த பள்ளிகள் இது போன்ற மத அடையாளங்களை அணிந்து வருகிறார்கள் என்பது தெரிந்தால் கூறுங்கள் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்" என அமைச்சர் தெரிவித்தார்.

சார் பா.ஜ.க. எச்.ராஜா சொல்லிய கருத்து.... என செய்தியாளர்கள் தொடர, எதுவும் பேசாமல் வணக்கம் போட்டுவிட்டு நகர்ந்தார்.

bavani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe