Advertisment

 எச்.ராஜா உருவபொம்மை எரிப்பு: போலிஸ் - விசிக இடையே தள்ளுமுள்ளு

r

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா எப்போதும் துடுக்கு தனமாக, திமிர் தனமாக பேசுவதையும், டுவிட்டர் பக்கத்தில் அநாகரிகமாக எழுதுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியையும், அதன் தலைவரையும் மரியாதைக்குரைவாகவும், தீண்டதகாத கட்சி என விமர்சித்துள்ளார்.

Advertisment

இது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையையும், அதன் தொண்டர்களை மிகவும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

rr

இந்நிலையில் இன்று டிசம்பர் 13ந்தேதி தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எச்.ராஜாவின் கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, இராணிப்பேட்டை, அரக்கோணம் போன்ற இடங்களில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திடீரென எச்.ராஜாவின் உருவபொம்மையை விசிக நிர்வாகிகள் எரித்தனர். அதை எரிக்கவிடாமல் போலிஸார் தடுக்க முயல பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதோடு, உருவபொம்மையை எரித்ததோடு எச்.ராஜாவுக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும், சாதி வெறியை தூண்டிவிடும் மோடி அரசியல் செயல்பாடுகள், அக்கட்சி தலைவர்களின் பேச்சுக்கள் குறித்து கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

h.raja
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe