"கலகத் தலைவன் எப்படி இருக்கிறது?" என்று கேட்ட முதலமைச்சர்... பதிலளித்த அமைச்சர்.... வைரலாகும் வீடியோ! 

publive-image

உதயநிதி ஸ்டாலின் தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் 'மாமன்னன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே, மகிழ் திருமேனி இயக்கத்தில் 'கலகத் தலைவன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின், 'கலகத் தலைவன்' படத்தின் சிறப்பு காட்சியை ஒரு தனியார் திரையரங்கில் கண்டு ரசித்தார். பின்னர், சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பை உருவாக்கியுள்ளதாக உதயநிதி உள்ளிட்ட படக்குழுவினரைப் பாராட்டினார்.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது 'கலகத் தலைவன்' படம் எப்படி இருக்கிறது என்று அமைச்சரிடம் கேட்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், "கலகத் தலைவன் எப்படி இருக்கிறது?" என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மா.சுப்பிரமணியனிடம் முதலமைச்சர் கேட்டார். இதற்கு அமைச்சர், படம் நன்றாக இருக்கிறது. முதல் நாளே படம் பார்த்தேன்" என்று பதிலளித்தார்.

Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe