Skip to main content

எய்ட்ஸ் கட்டுப்பாடு மையத்தில் தகுதியில்லாதவர்களை நியமித்தது எப்படி? - உயர்நீதிமன்ற கிளை

Published on 04/01/2019 | Edited on 04/01/2019

 

 

mm

 

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. இரதம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு மையத்தில் முறையான கல்வி தகுதியில்லாதவர்களை நியமித்தது எப்படி என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இது தொடர்பாக அரசிடம் உரிய விளக்கம் பெற்று பதிலளிக்க அரசு தரப்பு வழக்கறிஞருக்கும் உத்தரவிட்டு, வழக்கை வரும் ஜனவரி 8-ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு மாதம் ரூ. 7,500 வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

Published on 22/12/2020 | Edited on 22/12/2020

 

hiv blood women high court madurai bench order

 

தவறுதலாக எச்ஐவி ரத்தம் ஏற்றியதால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாதம் ரூபாய் 7,500 வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

 

கடந்த 2018- ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த பெண்ணுக்கு தவறுதலாக எச்ஐவி ரத்தம் ஏற்றியது தொடர்பான வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் இன்று (22/12/2020) விசாரணைக்கு வந்தது. 

 

வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'சென்னை தாம்பரத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான மருத்துவ வசதிகள் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினர். மேலும், எச்ஐவி ரத்தம் ஏற்றியதில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாதம் ரூபாய் 7,500 வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு இளநிலை உதவியாளர் பணி வழங்குவது குறித்து தமிழக அரசு பதில் தர உத்தரவிட்டனர். 

 

 

Next Story

இளைஞரின் மரணத்தில் சந்தேகம்... தந்தை புகார் மனு...

Published on 30/12/2018 | Edited on 30/12/2018

 

mm

 


ஹெச்.ஐ.வி தொற்றுள்ளது என்று தெரியாமல் இரத்தத்தை தானமாக கொடுத்த கமுதி திருச்சிலுவைபுரத்தை சேர்ந்த 21 வயது இளைஞர் கடந்த சில தினங்களுக்கு முன் எலி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயன்றார். தற்கொலைக்கு முயன்ற அவர் காப்பாற்றப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி திடீரென்று இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார்.  இதனை தொடர்ந்து இளைஞர் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக அந்த இளைஞரின் தந்தை போலீஸாரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். மேலும் மகனின் உடற்கூறு ஆய்வை மதுரை மருத்துவர்களை தவிர்த்து பிறமருத்துவர்களை கொண்டு செய்யவேண்டும் என்றும் உடற்கூறு ஆய்வு முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.