
அண்மையில்,மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதாஇல்லம், ‘ஜெயலலிதாநினைவு இல்லம்’ என மாற்றப்பட்டு தமிழக முதல்வர் எடப்பாடிபழனிசாமியால் திறந்து வைக்கப்பட்டது. ஜெயலலிதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்டதை எதிர்த்து ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர்வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கால், நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலதீர்ப்பின்படிபல்வேறு கட்டுப்பாடுகளுடனே 'ஜெ'- நினைவு இல்லம்திறக்கப்பட்டது.
இந்நிலையில் ஜெயலலிதாஇல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றப்பட்ட சட்டத்திற்கு எதிராகஜெ.தீபக்தொடர்ந்த வழக்கில், ''மறைந்த அனைத்து முதல்வர்களின் வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது'' எனத் தெரிவித்ததலைமை நீதிபதி, ''இன்னும் எவ்வளவு காலத்திற்கு இதுபோலநினைவு இல்லங்கள் அமைக்கப்போகிறீர்கள்.இதே நிலை தொடர்ந்தால்அமைசர்களின் வீடுகளும்நினைவு இல்லமாக மாற்றப்படும் போல. ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றியதமிழக அரசின் செயலை நியாயப்படுத்த முடியாது. நீதித்துறைக்குப் பல நீதிபதிகள் முக்கியபங்காற்றியுள்ளனர். அவர்களுக்கு சிலை வைக்க நீதிமன்றத்தில் அனுமதியில்லை'' எனக் கருத்துதெரிவித்துள்ளார்.
Follow Us