ADVERTISEMENT

உள்ளாட்சி தேர்லை நடத்த எத்தனை ஆண்டுகள்தான் திட்டம் போடுவீர்கள்? உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

12:28 PM Jul 31, 2018 | Anonymous (not verified)


உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அட்டவணையை ஆகஸ்ட் 6-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும், அன்றைய தினம் தாக்கல் செய்யாவிட்டால் அவமதிப்பு தொடர்பான நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நெடுஞ்செழியன், தொகுதி மறுசீரமைப்பு மற்றும் தேர்தலை நடத்துவது தொடர்பாக திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார். ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதி, எத்தனை ஆண்டுகள்தான் தேர்தலை நடத்த திட்டம் போடுவீர்கள் என கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த ஆண்டே 2 முறை தேர்தலை நடத்த உத்தரவிட்டும், இதுவரை ஏன் அந்த உத்தரவு மதிக்கப்படவில்லை என்றும் வினவினார். அத்தோடு உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அட்டவணையை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டார். ஆனால் வழக்கறிஞர் நெடுஞ்செழியனோ, இதற்கு ஒரு வார அவகாசம் வேண்டும் என கோரினார்.

வ இதனை ஏற்க மறுத்த நீதிபதி கடந்த முறை இதே வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞரை எங்கே என கேள்வி எழுப்பினார். உடடினயாக மூத்த வழக்கறிஞர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டார். இல்லாவிட்டால் இது நீதிமன்ற அவமதிப்பாக கருதி உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். அதன்படி தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கிறஞர், தேர்தல் தொடர்பாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அதற்கான அவகாசம் வேண்டும் எனவும் கோரினார்.

இதனையடுத்து, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அட்டவணையை ஆகஸ்ட் 6-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டதோடு அன்றைய தினம் தாக்கல் செய்யாவிட்டால் அவமதிப்பு தொடர்பான நடவடிக்கையை சந்திக்க நேரிடும் எனவும் நீதிபதி எச்சரித்தார். மேலும் ஆகஸ்ட் 6-ஆம் தேதியே இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT