Skip to main content

சென்னையில் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு திடல் உள்ளது? ஐகோர்ட் கேள்வி

Published on 10/07/2018 | Edited on 10/07/2018
hc

 

சென்னையில் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு திடல் உள்ளிட்ட உடற்கல்வி வசதிகள் உள்ளது என அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த சுபாஷ் சந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் "இந்தியாவில் கிராம பகுதிகளில் 70 % நகர பகுதிகளில் 80% ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடற்கல்விக்கும் முக்கியத்துவம் வழங்கவில்லை. உலக சுகாதார அமைப்பு உடற்கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. குழந்தைகள் ஓடியாடி விளையாடினால் மட்டுமே வலுவாக இருக்கும் என்றாலும், தமிழகத்தில் அதற்கான போதிய கவனத்தை செலுத்தாததால் உடற்கல்வி வீழ்ச்சியடைந்து வருகிறது. 

 

இந்தியாவிலேயே உடற்கல்விகான பல்கலைகழகம் தமிழகத்தில் மட்டுமே உள்ளது. 9000 பள்ளிகளில் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளனர். விளையாட்டுதிடல் இல்லாமல் இருப்பது விதிமீறல் என்றாலும் மாநில அரசோ, சி.பி.எஸ்.இ. அமைப்போ கண்டுகொள்வதில்லை. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் போதிய உட்கட்டமைப்பு வசதிகளுடன் உடற்கல்வியை பயிற்றுவிப்பது தொடர்பாக விதிகள் வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி,  நீதிபதி ஆஷா அமர்வில் விசாரணைக்கு வந்த போது " வழக்கில் சிபிஎஸ்இ அமைப்பையும் எதிர் மனுதாரராக நீதிபதிகள் சேர்த்தனர். மேலும், சென்னையில் உள்ள எத்தனை தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் விளையாட்டு திடல் உள்ளிட்ட உடற்கல்விக்கான வசதிகள் உள்ளது என்பது குறித்து மூன்று வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்".


தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்ககோரிய வழக்கில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுதுறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஆலடிபட்டியை சேர்ந்த நல்லதம்பி ராஜ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில்

" ரியல் எஸ்டேட் (ரெகுலேஷன் அண்ட் டெவலப்மெண்ட்) சட்டம் 2016 ல் அறிவிக்கப்பட்டுள்ளது.ரியல் எஸ்டேட் திட்டங்கள் தொடர்பாக கண்காணிக்கவும்,விசாரிக்கவும் இந்த சட்டம் அமல்படுத்தபட்டது. ரியல் எஸ்டேட் (ரெகுலேஷன் அண்ட் டெவலப்மெண்ட்) சட்டம் விதிகளை நிறைவேற்றுவதற்காக தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தை 2017 ஆம் ஆண்டு அங்கீகரித்தது.


தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க நீதிமன்றம் உத்தரவிடபட்டிருந்தது.ஆனால் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை. ஒழுங்குமுறை ஆணையத்தின் முழுத் தலைவராக நியமிக்கப்படாவிட்டால் ரியல் எஸ்டேட் திட்டத்தில் விதிமுறைகள் பின்பற்றாமல்  இருப்பதால் அபார்ட்மெண்ட் அல்லது கட்டிடங்கள் மூலம் அரசுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி காலியாக இருப்பதால்     ரியல் எஸ்டேட் வீடு வாங்குவோர் வீட்டில் குறைபாடுகள் இருப்பதாக புகார் தெரிவித்தால் விரைவாக நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை. தமிழ்நாட்டில் பல டெவலப்பர்கள் மற்றும் அடுக்கு மாடிக் கட்டிடங்கள் கட்டுபவர்கள் ரியல் எஸ்டேட்டில் பதிவு செய்யாதவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ரியல் எஸ்டேட் சட்டம் மற்றும் விதிகளை பின்பற்றாமல் இருக்கின்றனர்.

 

ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணைய தலைவர் இல்லாததால் புதிய அப்பார்ட்மெண்ட் திட்டங்கள் செயல்படுத்துபவர்கள் ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்தில் பதிவு செய்ய மறுக்கின்றனர். இதனால் அரசுக்கு இழப்பீடு ஏற்படுகிறது,
27.06.2018 தேதியன்று தமிழக வீட்டுவசதி வாரிய மற்றும் நகர்புற மேம்பாட்டுதுறை செயலருக்கு மனு அனுப்புனேன்,ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்களை உடனடியாக நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு இன்று நீதிபதி செல்வம்,நீதிபதி பஷீர் அகமது அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுதுறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கினை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

சார்ந்த செய்திகள்