ADVERTISEMENT

'இன்னும் எத்தனை நாட்கள் தான் பொறுத்துக் கொள்வது' - தி.மு.க. கண்டனம்!

05:20 PM Aug 22, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

யோகா, நேச்சுரோபதி மருத்துவர்களுக்கான ஆன்லைன் பயிற்சியின்போது, இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள் என ஆயுஷ் அமைச்சகச் செயலாளர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்விற்கு கண்டனத்தைப் பதிவு செய்துள்ள தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்பது போல செயல்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தநிலை வந்திருக்காது. அதிகாரிகளை வைத்து இந்தியைத் திணிப்பது தான் தங்கள் திட்டம் என்ற பா.ஜ.க. அரசின் எண்ணத்தை வெளிப்படுத்துகிறது எனத் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் கூட்டங்களை ஆங்கிலத்தில் நடத்த பிரதமருக்கு முதலமைச்சர் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


அதேபோல், 'இன்னும் எத்தனை நாட்கள் தான் பொறுத்துக் கொள்வது' என தி.மு.க. எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் எம்.பி. கனிமொழி, மத்திய அமைச்சரகச் செயலாளர் வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா அமைச்சகத்தின் பயிற்சியிலிருந்து இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என்று சொல்லியிருப்பது மத்திய அரசின் இந்தித் திணிப்பு கொள்கையை அப்படியே பிரதிபலிக்கிறது. இது கண்டிக்கதக்கது. மத்திய அரசு உடனடியாக அந்தச் செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் எத்தனை நாள் இந்தி தெரியாது என்றால், அவமதிக்கப்படுவதைப் பொறுத்துக் கொள்ளப் போகிறோம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT