Advertisment

காவல்துறை அதிகாரிகளின் குடும்பத்திற்கு எத்தனை அரசு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன? நீதிபதி கேள்வி

pc

காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப பணிகளுக்கு எத்தனை காவல் துறை வாகனங்கள் பயன்படுத்தபடுகின்றன என்று காவல் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

காவலர்களின் குறைகளை தீர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான பல்வேறு நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏன் இதுவரை அமல்படுவில்லை என்றும் காவல் உயர் அதிகாரிகளின் வீட்டில் எத்தனை காவலர்கள் ஆடர்லியாக பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

Advertisment

இது தொடர்பான வழக்கு இன்று நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை உதவி ஐஜி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை படித்து பார்த்த நீதிபதி, தான் எதிர்பார்த்த படியே ஆடர்லி தொடர்பான எந்த தகலும் இல்லாமல் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் நீதிபதி, மொத்த காவலர்களில் 10 முதல் 15 சதவீதத்தினர் ஆடர்லியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர் . 1990ல் ஓய்வுபெற்ற காவலர் ஒருவர் இன்னும் ஆடர்லியாக பணியாற்றி வருகின்றார். மேலும் பல குற்ற வழக்குகள் உள்ள அரசியல் கட்சியை சேர்ந்த ஒரு பிரமுகர் வீட்டில் காவலர்கள் ஆடர்லியாக பணியாற்றி வருகின்றனர். இது போன்ற தகவல்கள் தங்களுக்கும் தெரியும் என்றார்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையின் எத்தனை வாகனங்கள் அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்த பட்டு வருகின்றன? காவல்துறையினரின் பணி நேரத்தை ஏன் நிர்ணயிக்க கூடாது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் நீதிமன்றத்தில் தவறான பதில் மனு தாக்கல் செய்த ஐ.ஜி அன்றைய தினம் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

questioned Judge police officers vehicles government
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe