
கள்ளக்குறிச்சியில் பெண்கள் ஒன்றிணைந்து டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது சிறுளாப்பட்டு கிராமம். இந்த பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபான கடைகளால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பெண்கள் பாதிப்புக்குள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சம்பந்தப்பட்ட டாஸ்மாக்கில் மது வாங்கும் சிலர் மதுவை குடித்துவிட்டு கிராமப் பகுதிகளிலேயே பாட்டில்களை போட்டுவிட்டு செல்வதாகவும் இதனால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அதேபோல் மோதல் போக்கு ஏற்படுவதாகவும் எனவே சம்பந்தப்பட்ட மதுபான கடையை மூட வேண்டும் என அப்பகுதி பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று சிறுளாப்பட்டு பகுதியைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்றாக இணைந்து டாஸ்மாக் கடையில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பலமுறை மனு கொடுத்தும் கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என கோஷங்களை எழுப்பிய படி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் மதியம் ஒரு மணி அளவில் கையில் கொண்டு வந்த தடி, கட்டைகள் ஆகிட்டவற்றை கொண்டு டாஸ்மாக் கடையை அடித்து உடைக்க முற்பட்டனர். இதனால் அந்த பகுதியில் உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.