சென்னை மாநகரமே தண்ணீர் இன்றி தவித்துவரும் நிலையில்தொடர்ந்து ஒருதுளிகூட மழையே பெய்யாத நாட்களின் எண்ணிக்கையில் சென்னை மாநகரம் மோசமான புதிய வரலாறு படைக்க காத்திருக்கிறது.

Advertisment

chennai

சென்னையில் கடந்த 191நாட்களாக ஒருதுளி கூடமழை பெய்யவில்லை. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் பொழுதுதான் சென்னையில் கடைசியாகமழைபெய்தது. 2015 ஆம் ஆண்டில் தொடர்ந்து 193 நாட்கள் சென்னையில் மழை பெய்யாமல்இருந்ததுதான்மோசமான வரலாறாகஇருந்தது.

chennai

Advertisment

கடந்த ஆண்டின் இறுதியில் இருந்து தற்போது வரை191 நாட்களாக ஒரு துளி மழைக்கூட பொழியாமல்இருக்கும் நிலையில் இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இதேநிலைமை நீடித்தால் புதிய மோசமான வரலாறு படைக்கும் சென்னை என்பதில் எந்த ஆச்சர்யமும்இல்லை.

இந்தநிலைதொடர்ந்து இருக்கும் பட்சத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத மோசமான வரலாற்றை சென்னை மாநகரம் படைக்கும். தண்ணீர் தட்டுப்பாடும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். விட்டால் ஒரு துளிகூட மழைபொழியாத நாட்களில் சென்னை இரட்டை சதம் அடித்துவிடுமோ என எச்சரிக்கை விடுத்து வருகின்றனர் சமூக மற்றும் சூழியல் ஆர்வலர்கள்.