கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும்ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதேபோல் தமிழக அரசு அறிவித்திருந்த 144 தடை உத்தரவும்ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் உத்தரவை மீறி வெளியில் சுற்றுபவர்களது வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்வதோடு, பல்வேறு நூதனதண்டனைகளையும் கொடுத்து வருகின்றனர். தற்பொழுது காவல்துறை சார்பில் இருந்து இந்த உத்தரவை கடைபிடிக்காதவர்களின் எத்தனை வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான பட்டியல் ஒன்றுவெளியிடப்பட்டுள்ளது.