'' How long will you cheat without paying for the tea you drink- Incident near chennai

Advertisment

சென்னைநாவலூர்அருகேரியாஸ்என்பவர்டீக்கடைநடத்தி வருகிறார். கேரளாமாநிலத்தைச்சேர்ந்தரியாஸ்அந்தபகுதியில் கிட்டத்தட்ட மூன்றுவருடமாகக்கடை நடத்தி வருகிறநிலையில்டீக்கடைஉள்ள அதே கட்டிடத்தில் தினேஷ் என்பவர் சிறிய பெட்டிக்கடைவைத்ததாகக்கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி தினேஷ்ரியாஸின்கடைக்கு டீ குடிக்க வந்துள்ளார். டீ குடித்துவிட்டு காசுகொடுக்காமல்செல்வதைவாடிக்கையாகக்கொண்டுள்ளார். 'எவ்வளவு நாள்தான் குடிச்ச டீக்கு காசு கொடுக்காமல்ஏமாற்றுவாய்'எனக்கேட்டுள்ளார். அதற்கு தினேஷ் 'நான்லோக்கல்என்னிடமே காசு கேட்கிறாயா' என மிரட்டும் தொனியில்பேசிவிட்டுச்சென்றுள்ளார். இப்படி பலமுறை டீ குடித்துவிட்டு காசு தராததால் கடைக்காரரானரியாஸ்கட்டிட உரிமையாளரிடம் இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கட்டிட உரிமையாளர்தினேஷிடன்இதெல்லாம் தவறு என எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரம் கொண்ட தினேஷ், ரியாஸின்கடைக்கு மதுபோதையில் சென்று என்னைப்பற்றியேபுகார் செய்கிறாயா எனரியாஸைதாக்கியதோடு, கடையையும் அடித்து நொறுக்கியுள்ளார். இது தொடர்பாககேளம்பாக்கம்காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில் அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்தசிசிடிவியில் பதிவானகாட்சிகள் அடிப்படையில்போலீசார்விசாரணை செய்து வருகின்றனர்.