
கணவன் குடித்துவிட்டு பிரச்சனை செய்வதால் மனமுடைந்த பெண் ஒருவர் வைகை ஆற்று வெள்ளத்தில் இறங்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் திருமணமான இளம்பெண் ஒருவர் சமீபத்தில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும் வைகை ஆற்றில் இறங்கி தற்கொலைக்கு முயன்றார். பிருந்தாவன் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் குடிக்கு அடிமையானவர் என்று கூறப்படும் நிலையில் குடித்துவிட்டு குடும்பத்தில் தினமும் பிரச்சனை செய்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ஆனந்தனின் மனைவி மல்லிகா வைகையாற்றில் இறங்கினார்.
மல்லிகா ஆற்றில் இறங்குவதைக் கண்டு அதிர்ந்த ரோந்து போலீசார் அவரை கரைக்கு வரச்சொல்லி அறிவுறுத்தினர். ஆனால் அவர் கரைக்கு வர மறுத்த நிலையில், ஆற்றில் இறங்கிய போலீசார் ராஜேஷ், பாலமுருகன் ஆகியோர் அவரை சமாதானப்படுத்தினார். "எவ்வளவு தூரம்தான் கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு வாழுறது'' என தற்கொலைக்கு முயன்ற பெண் இடுப்பளவு வெள்ள நீரில் அழுதுபுலம்புவதும், ''கரைக்கு வாம்மா பேசிக்கலாம்'' என போலீசார் அறிவுறுத்தும் வீடியோ காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளது.
Follow Us