ADVERTISEMENT

மாணவர்கள் மீதான தாக்குதலை எப்படி பார்க்கிறீர்கள்... பதிலளிக்க மறுத்த ரஜினிகாந்த்!  

11:45 AM Dec 17, 2019 | kalaimohan

டிசம்பர் 15 ஆம் தேதி குடியுரிமை சட்டத்துக்கு எதிராக, டெல்லி மதுரா சாலையில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


அப்போது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் டெல்லி போக்குவரத்து கழகத்தின் 4 பஸ்களை ஒரு கும்பல் தீவைத்து கொளுத்தியது. 2 போலீஸ் வாகனங்களும் எரிக்கப்பட்டன. இந்த மோதலால் 6 காவலர்கள் மற்றும் 35 க்கும் மேற்பட்ட மாணவர்களும் காயமடைந்தனர். இருப்பினும் மாணவர்கள் அங்கு விடிய விடிய போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியுள்ள நிலையில் தமிழகத்திலும் பல்வேறு அரசியல் கட்சிகள் குடியுரிமை மசோதாவிற்கும், டெல்லி பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்டதற்கும் தங்களது கண்டனங்களை போராட்டம் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடந்தது. அந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்திடம் டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, நடிகர் ரஜினிகாந்த் இது சினிமா விழா அரசியல் விழா அல்ல என பதிலளிக்க மறுத்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT