Skip to main content

“கூகுள் பே மூலம் எப்படி பணம் பறிப்பார்கள்?” - டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம்

Published on 09/03/2023 | Edited on 09/03/2023

 

"How do you extort money with Google Pay?" Explanation by DGP Shailendra Babu

 

கோவை சரக தொழிலதிபர்கள் இடையேயான ஆலோசனைக் கூட்டம் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது பேசிய அவர், “வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் பரவிய வதந்திகள் பொய் செய்திகளை நல்ல முறையில் கையாண்ட தொழிலதிபர்களுக்கு பாராட்டுகள். இப்பொழுது நிலைமை சீராக உள்ளது என்றாலும் நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டி இருக்கிறது. ஏனென்றால் பொய்யான வதந்திகள் தொடர்ந்து பரவுகிறது. அவர்கள் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலரை கைது செய்ய நமது காவல்துறையினர் வெளி மாநிலங்களில் முகாமிட்டுள்ளனர். தற்போது வரை 11 வழக்குப் பதிவுகள் செய்துள்ளோம். யார் செய்தார்கள், அவர்களது நோக்கம் என்ன என்பதெல்லாம் புலன் விசாரணையில் தெரிய வரும். அதிகமானோர் மீது வழக்குகளை பதிவு செய்துள்ளோம். அதில் சிலருக்கு சில அரசியல் கட்சிகளுடன் தொடர்பு உள்ளது. புலன் விசாரணையின் இறுதியில் தகவல்களை கொடுக்கிறோம்.

 

செல்போனில் இணைய வசதி இருந்தால் உலகில் உள்ள மக்களில் யார் வேண்டுமானாலும் உங்களை தொடர்பு கொள்ளலாம். யார் வேண்டுமானாலும் ஒரு பொய் சொல்லி உங்களை நம்ப வைத்து உங்கள் வங்கிகளில் உள்ள பணத்தை ஒட்டு மொத்தமாக எடுத்து செல்லலாம். கூகுள் பேயில் உங்களது கணக்கில் 100 ரூபாயோ 5000 ரூபாயோ போடலாம். அப்பொழுது நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். நம் கணக்கிற்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது என்று. அப்பொழுது ஒரு அழைப்பு வரும். இந்த பணத்தை தெரியாமல் போட்டுவிட்டேன் என்று. நான் ஒரு லிங்க் அனுப்புகிறேன். அதில் பணத்தை திருப்பி கொடுங்கள் என்று சொல்வார்கள். யார் லிங்க் அனுப்பினாலும் அதில் எந்த தகவலையும் கொடுக்காதீர்கள். உங்களுக்கு ஓடிபி வந்து அதை நீங்கள் சொல்லிவிட்டீர்கள் என்றால் அதை லிங்க் அனுப்பியவர் மொத்தமாக எடுத்துச் சென்று விடுவார். 

 

யாராவது உங்களுக்கு பணம் அனுப்பினாலோ அல்லது வங்கிக் கணக்கில் பணம் போட்டாலோ நீங்கள் அதை சட்டை செய்யாதீர்கள். அந்த நபரை ப்ளாக் செய்யுங்கள். காவல் நிலையத்திற்கு சொல்லுங்கள். அந்த நபர் ஒரு குற்றவாளி. இன்று வீட்டையெல்லாம் உடைத்து திருடுவது கிடையாது. அதற்கான தேவையும் இல்லை. உங்கள் வங்கிகளில் இருக்கும் பணத்தை சர்வ சாதாரணமாக எடுத்து விடுவார்கள்” எனக் கூறினார். 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கத்தியை காட்டி கூகுள் பே மூலம் வழிப்பறி; 5 பேர் கைது

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
robbery by Google Pay; 5 people arrested

காஞ்சிபுரத்தில் சாலையில் செல்வோரிடம் கத்தியைக் காட்டி கூகுள் பே ஆப் மூலம் பணத்தை வழிப்பறி செய்த 5 நபர்கள் போலீசாரல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டாரங்களில் சாலையில் வருவோர் செல்வோரை மர்ம கும்பல் ஒன்று கத்தியை காட்டி மிரட்டி கூகுள் பே மூலம் வழிப்பறி செய்வதாக அதிகப்படியான புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த வழிப்பறி தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ஐந்து பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் கூகுள் பே ஆப் மூலம் வழிப்பறி  செய்து அதன் மூலம் இரண்டு லட்சம் வரை கொள்ளையடித்தது போலீசார் விசாரணையில் தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

ஓய்வுபெற இருக்கும் சைலேந்திரபாபு ஐபிஎஸ்; தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்?

Published on 22/06/2023 | Edited on 22/06/2023

 

Shailendrababu IPS who is about to retire; Who will be the next DGP of Tamil Nadu?

 

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வரும் 30 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறும் நிலையில் தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்காக இன்று டெல்லியில் மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தில் அடுத்த தமிழக டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதற்காகத் தற்போதைய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் ஆகியோர் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

 

இதில் தமிழ்நாடு கேடரில் துறை ரீதியான நடவடிக்கைகளுக்கு உள்ளாகாத ஐந்து மூத்த அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. ஆலோசனைக்குப் பிறகு அதில் மூன்று பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு இறுதியில் அதில் ஒருவர் தமிழக டிஜிபியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். தமிழ்நாடு கேடரில் டெல்லி காவல் ஆணையராக உள்ள சஞ்சய் அரோரா, பி.கே. ரவி, தற்போது சென்னை காவல் ஆணையராக இருக்கும் சங்கர் ஜிவால், காவலர் வீட்டு வசதி வாரிய டிஜிபி ஏ.கே. விஸ்வநாதன், ஆபாஷ் குமார் ஆகியோர் தமிழ்நாடு கேடரில் மூத்த அதிகாரிகளாக உள்ளனர். இவர்களில் ஒருவரே தமிழகத்தின் அடுத்த டிஜிபியாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.