இந்தியாவில் உள்நாட்டு பயணம் மேற்கொள்ள விமான டிக்கெட் இருந்தால் போதும். ஆனால் இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள "பாஸ்போர்ட்" (Passport) கட்டாயம் தேவை என்பது அனைவரும் அறிந்தது. இந்த பாஸ்போர்ட்டை எவ்வாறு விண்ணப்பிப்பது? எங்கு செல்வது ? என மக்களின் சிலருக்கு தெரியவில்லை. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் "பாஸ்போர்ட்" நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகின்றனர். இதற்கான
அலுவலகங்கள் ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரிலும் உள்ளது .
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WhatsApp Image 2019-03-21 at 12.27.39 AM.jpeg)
தமிழகத்தில் "பாஸ்போர்ட்" அலுவலகங்கள் எங்கு உள்ளது.
1.திருச்சி
2.கோயம்புத்தூர்
3.சென்னை
மத்திய அரசு அனைத்து மாநில மாவட்ட தலைநகரங்களில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் "பாஸ்போர்ட் கேந்திரா சேவா அலுவலகம்" துவக்கியுள்ளது. இதன்படி சேலம் , ராசிபுரம் , ஈரோடு உள்ளிட்ட தலைமை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் கேந்திரா சேவா மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்கள் கோயம்புத்தூரில் உள்ள தலைமை பாஸ்போர்ட் அலுவலகத்தில் கீழ் செயல்பட்டு வருகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WhatsApp Image 2019-03-21 at 12.28.18 AM.jpeg)
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதள வசதிகள் :
1.Ordinary Passport.
2. Diplomatic / Official Passport.
3. Police Clearance Certificate.
4. Identity Certificate.
5. Surrender Certificate.
6. Background Verification for GEP.
7. LOC Permit.
உள்ளிட்டவை மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் "பாஸ்போர்ட் சேவா" இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த வரிசையில் இந்தியர்கள் அனைவரும் பயன்படுத்தக்கூடிய பாஸ்போர்ட் "ORDINARY PASSPORT" ஆகும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WhatsApp Image 2019-03-21 at 12.29.06 AM.jpeg)
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :
1. ஆதார் அட்டை அசல் ( பாஸ்போர்ட் விண்ணப்பிப்போரின் பெயர் , பிறந்த தேதி , முகவரி , தந்தை பெயர் மற்றும் தாய் பெயர் சரியாக இருக்க வேண்டும்) இதில் தகவல்கள் சரியாக இல்லையென்றால் ( பிறந்த தேதிக்காக - பான் கார்டு , 10th , 12, Degree Mark sheet உள்ளிட்டவை பயன்படுத்தலாம்) அடையாள அட்டையில் நிரந்தர முகவரி சரியாக இல்லையெனில் கிராம நிர்வாக அலுவலரை அணுகி இருப்பிட சான்றிதழ் பெறலாம்.
2. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ -2 (Passport Size photo)
3. விண்ணப்பிப்போரின் அருகில் உள்ள வீடுகளின் வசிப்போரின் பெயர் மற்றும் முகவரி , தொலைப்பேசி எண் கட்டாயம் தேவை.இதே போல் இரண்டு வீடுகளில் தகவல்கள் வேண்டும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WhatsApp Image 2019-03-21 at 12.29.58 AM_0.jpeg)
பாஸ்போர்ட் (Passport) விண்ணப்பிக்க அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் .
1. விண்ணப்பத்தாரரின் வயது 15க்குள் இருந்தால் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை (Normal) ஆக இருந்தால் கட்டணம் ரூபாய் 1000 ஆகும். இல்லையெனில் பாஸ்போர்ட் உடனடியாக வேண்டுமென்றால் (தட்கல்) முறையில் விண்ணப்பிக்கலாம் . இதற்கான கட்டணம் ரூபாய் 3,000 ஆகும். இந்த முறை கட்டணம் அதிகம். ஆனால் விண்ணப்பித்த ஒரு வாரத்தில் பாஸ்போர்ட் பெறலாம்.
2. விண்ணப்பத்தாரர்களின் வயது 18க்கும் மேல் இருந்தால் மற்றும் பாஸ்போர்ட் பக்கங்கள் 36 எனில் கட்டணம் ரூபாய் 1500 ஆகும் . பாஸ்போர்ட் பக்கங்கள் 60 எனில் கட்டணம் ரூபாய் 2000 ஆகும். இது (Normal) முறையில் விண்ணப்பிக்கும் பாஸ்போர்ட் ஆகும்.
3.தட்கல் முறையில் விண்ணப்பித்தால் பாஸ்போர்ட் பக்கங்கள் 36 எனில் கட்டணம் ரூபாய் 3500 ஆகும். பாஸ்போர்ட் பக்கங்கள் 60 எனில் கட்டணம் ரூபாய் 4000 ஆகும். இந்த இரண்டு முறைகளையும் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் தங்கள் வசதிக்கு ஏற்றால் போல் தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WhatsApp Image 2019-03-21 at 12.30.54 AM.jpeg)
பாஸ்போர்ட் கட்டணத்தை எவ்வாறு செலுத்துவது ?
தேசிய மையமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளின் (Debit card ,Credit Card, Net Banking) மூலம் பாஸ்போர்ட்டுக்கான கட்டணத்தை இணையதள வழியில் எளிமையாக செலுத்தலாம்.
"பாஸ்போர்ட்"விண்ணப்பிப்பது எப்படி?
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க இதற்கான இணையதள முகவரி : https://portal2.passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink ஆகும். இந்த இணையதளம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும். இந்த இணையதளத்தில் தங்களுக்கென்று தனி கணக்கை தொடங்க வேண்டும். அதன் பிறகு "USER NAME" மற்றும் "PASSWORD" உருவாக்க முடியும். அதனை தொடர்ந்து பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பத்தில் குறிப்பிட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதிலளிக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தாரரின் புகைப்படம் மற்றும் பிறந்த தேதிக்கான சான்றிதழ் , முகவரிக்கான சான்றிதழ் நகல் எடுக்கப்பட்டு பிறகு விண்ணப்பத்தாரரிடம் கையெழுத்து பெறப்பட்டு பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பதாரரின் அருகில் உள்ள மாவட்ட தலைமை பாஸ்போர்ட் அலுவலக பெயரை குறிப்பிட்டு நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட வேண்டும். இதற்கு முன் பாஸ்போர்ட் அலுவலகத்தில் எந்த தேதியில் நேர்காணலுக்கு செல்ல வேண்டும் என்பதை விண்ணப்பத்தாரரே தேர்வு செய்யலாம்.
அந்த தேதியில் "Appointment" உள்ளதா? இல்லையா? என்பதை இணைய தள முகவரி :
https://portal2.passportindia.gov.in/AppOnlineProject/online/apptAvailStatus சென்று அறியலாம். பாஸ்போர்ட் விண்ணப்பித்த பிறகு பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் மற்றும் ஈமெயிலுக்கு "FILE NO" அல்லது "Application No" வரும். இதன் பின் பாஸ்போர்ட் விண்ணப்பித்தற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்த பின் விண்ணப்பித்த "APPOINTMENT" தேதி மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட நேரத்தில் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும். அதனை தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்கள் அசல் மற்றும் விண்ணப்பத்தை பாஸ்போர்ட் அலுவலர்கள் சரிப்பார்த்து "Electronic Signature" மற்றும் "புகைப்படம்" பிடிப்பார்கள். அதன் பிறகு அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து விடலாம். பாஸ்போர்ட் தொடர்பான விண்ணப்ப நிலையை பாஸ்போர்ட் அலுவலகம் குறுந்தகவல் மூலம் அனுப்பும் . அப்படி வரவில்லையெனில் இணையதள முகவரி : https://portal2.passportindia.gov.in/AppOnlineProject/statusTracker/trackStatusInpNew சென்று பாஸ்போர்ட் நிலையை அறியலாம். அதே போல் சில நாட்கள் கழித்து சமந்தப்பட்ட காவல்துறை அலுவலகத்தில் இருந்து விண்ணப்பத்தாரருக்கு அழைப்பு வரும். பின் சென்று காவல்துறை அதிகாரி விண்ணப்பத்தாரரின் மேல் எந்த வித வழக்கும் இல்லை. இவருக்கு பாஸ்போர்ட் வழங்கலாம் என உறுதிப்படுத்தி விண்ணப்பதாரரிடம் கையெழுத்தை பெறுவர். பிறகு சில நாட்கள் கழித்து தபால் அலுவலர் மூலம் விண்ணப்பதாரரின் இல்லத்திற்கே சென்று பாஸ்போர்ட் வழங்கப்படும்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அப்போது விண்ணப்பதாரரின் கையெழுத்திட்டால் மட்டுமே தபால்காரர் பாஸ்போர்ட் வழங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாஸ்போர்ட் விண்ணப்பித்து 15 நாட்களுக்குள் வருவது குறிப்பிடத்தக்கது. எனவே படித்தவர்கள் மற்றும் படிக்காதவர்கள் என அனைவரும் ஆதார் அட்டை ஒன்று இருந்தால் போதும் எளிமையான முறையில் மக்கள் பாஸ்போர்ட் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த "பாஸ்போர்ட்" அட்டையின் நிறம் "கருமை நீல நிறம்" Dark Blue ஆகும். இதற்கான விண்ணப்பத்தை மொபைல் செயலி மூலமும் விண்ணப்பிக்கலாம். இதற்கான மொபைல் செயலி முகவரி : "mPassport Seva" ஆகும். இதை கூகுள் பிளே ஸ்டோர்க்கு சென்று பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பி .சந்தோஷ் , சேலம் .
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)