தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக இருந்த நிலையில், இன்று மேலும் 110 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு எண்ணிக்கை 234 ஆக அதிகரித்துள்ளது. தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/11111_219.jpg)
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "கரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும். மக்களின் ஒத்துழைப்பால்தான் கரோனா பரவுவதை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் முடியும். நோய் பரவலைத்தடுக்கவே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன" என்று தெரிவித்துள்ளார்.
Follow Us