Advertisment

'ஒரு பிரதமர் இப்படியா பொய் பேசுவது?'- முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கு

How can a Prime Minister lie like this?- Chief Minister M. K. Stalin Attacks

Advertisment

தமிழக அரசின் திட்டங்கள் முறையாக மக்களைச் சென்றடைகிறதா என்பதை தெரிந்து கொள்வதற்காக 'நீங்கள் நலமா' எனும் புதிய திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார்.

'நீங்கள் நலமா' திட்டம் குறித்து தமிழக அரசால்வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் திட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 'மகளிர் உரிமைத் தொகை, விலையில்லா பயணம், பள்ளியில் காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி இந்த திட்டத்திற்கான அனைத்து நிதியையும் தமிழ்நாடு அரசு தன்னுடைய சொந்த நிதியிலிருந்து அளித்து வருகிறது. கடுமையான நிதி நெருக்கடி சூழலில் இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு ஒதுக்கப்படும் நிதியில் செயல்படும் திட்டங்கள் ஒவ்வொரு மக்களையும் சென்று சேர வேண்டும் என நினைத்து நினைத்து திட்டங்களை தீட்டி வருகின்றேன். ஆனால், சென்னைக்கு வந்த பிரதமர் மோடி அப்பட்டமாக பொய் பேசி விட்டு சென்றுள்ளார். மாநில அரசுக்கு தராமல் மக்களுக்கு நேரடியாக நிதி வழங்கி வருவதாக அப்பட்டமான பொய்யைச் சொல்லிவிட்டு சென்றுள்ளார் மோடி. ஒரு பிரதமர் இப்படியா பொய் சொல்வது? எந்த மக்களுக்கு நிதி கொடுத்தார் என கூறியிருந்தால் அவர்களுக்கு கிடைத்ததா? என கேட்கலாம். வெள்ள நிவாரணமாக ஒரு ரூபாயையாவது ஒதுக்கி தமிழ்நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உதவி செய்தாரா? ஆனால் ஒன்றிய அரசு நிதி தரவில்லை என்றாலும் 8 மாவட்ட மக்களுக்காக மாநில பேரிடர் நிதி அரசு துறைகளில் இருந்து 3,406 கோடி ரூபாய் வழங்கியுள்ளோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Election modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe