Advertisment

ஆன்லைன் மூலம் மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொள்வது எப்படி?- விரிவான தகவல்!

How to attend a medical consultation online? - Detailed information!

ஆன்லைன் மூலம் முதன்முறையாக நடைபெறவிருக்கும் பொதுப்பிரிவினருக்கான மருத்துவக் கலந்தாய்வில் எப்படி பங்கேற்பது என்பது பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

அதன்படி, ஆன்லைன் மூலம் மருத்துவக் கலந்தாய்வில் கலந்துக் கொள்வது எப்படி? என்று விரிவாகப் பார்ப்போம்!

Advertisment

tnmedicalselection.org என்ற இணையதளத்தின் வாயிலாக கலந்தாய்வில் பங்கேற்கலாம். கலந்தாய்வில் பங்கேற்க விரும்புவோர் இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்து கொண்டு, முதலில் கடவுச்சொல்லை மாற்றி அமைக்க, ரீசெட் பாஸ்வேர்டு என்பதை கிளிக் செய்ய வேண்டும்.விண்ணப்பிக்கும் போது கொடுத்த கைபேசி எண்ணுக்கு 'OTP' வரும். அந்த 'OTP'-ஐ உள்ளீட்டு, புதிய கடவுச்சொல்லை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக, Login செய்து விண்ணப்பிக்கும் போது கொடுத்த மின்னஞ்சல் முகவரி (அல்லது) விண்ணப்ப எண் (அல்லது) விண்ணப்பிக்கும் போது உருவாக்கிய 'Login ID'-யை - பயன்படுத்தலாம். இவற்றைபயன்படுத்தி 'Login' செய்யும் போது, புதிதாக உருவாக்கப்பட்ட கடவுச்சொல்லை டைப் செய்து உள்ளே நுழையலாம். உள்ளே சென்றவுடன் இடதுபுறம் செல்ப் டீடெய்ல்ஸ் என்ற தலைப்பின் கீழ் பெயர், பாலினம், சமூகம் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். அதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களது அசல் சான்றிதழை சரிபார்ப்பதற்காக நேரில் கொண்டு செல்ல வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்கான மையங்களைத் தேர்வு செய்யலாம். தங்களுக்கு அருகில் உள்ள மூன்று மையங்களை மாணவர்கள் தேர்ந்தெடுக்கலாம்.

அதன்பின், கலந்தாய்வு கட்டணமாக, ரூபாய் 500- ஐபாரத ஸ்டேட் வங்கி (அல்லது) இந்தியன் ஓவர்சீஸ் வங்கி யின் மூலம் இணையவழி மூலம் செலுத்த வேண்டும். கட்டணம் கட்டி முடித்தவுடன், பதிவு செய்யும் நடைமுறை முடிவுக்கு வரும்.

online Tamilnadu students
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe