Advertisment

இவ்வளவு பிரச்சனைகளை வச்சிக்கிட்டு எப்படி ஓட்டுக் கேட்க போறது.. அதிகாரிகளிடம் எகிறிய அதிமுக மகளிரணி

புதுக்கோட்டை நகரத்தின் ஒரு பகுதி பாலன் நகர். அந்த பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. தினசரி பணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் அவல நிலையில் உள்ளனர். பலமுறை அதிகாரிகளிடமும், அரசியல்வாதிகளிடமும் முறையிட்டும் பலனில்லை என்பதால் இன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்க திரண்டு வந்தனர் பெண்கள். அலுவலக நுழைவாயிலில் தர்ணா போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டிருந்த நிலையில் அங்கு வந்த அதிகாரிகளிடம் ஒரு நாளைக்கு ரூ. 300 க்கு குடிக்க, குளிக்க தண்ணீர் வாங்க வேண்டியுள்ளது. தினமும் தண்ணீரை காசு கொடுத்து வாங்க நாங்க என்ன சம்பாதிக்கிறோம். ஒரு அடிபம்பு கூட அந்தப் பகுதியில்இல்லை என்று ஒரு பெண் பேசி முடிக்கும் போது..

Advertisment

admk

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

அந்த கூட்டத்தில் இருந்த அ.தி.மு.க மகளிரணி இந்துவிடம் நீங்க ஆளும் கட்சிக்காரங்க தானே என்று சொல்ல.. நாங்க கட்சிக்காரங்க தான் இல்லன்னு சொல்ல.. இவ்வளவு பிரச்சனையை வச்சுகிட்டு எப்படி அந்த ஏரியாவுக்கு போய் ஓட்டுக் கேட்க போக முடியும். அதை சரிபண்ணி கொடுத்தா தானே ஓட்டுக் கேட்க போக முடியும். இப்ப அதைத்தான் கேட்கிறோம். எங்களுக்கு பைபை சரிபண்ணி கொடுங்க என்றார் அதிகாரிகளிடம்.

அதிகாரிங்க ஏரியாவை போய் பாருங்க அப்பறம் வந்து பேசுங்க என்று அதிகாரிகளிடம் எகிறி பேசினார். அதிகாரிகள் கப்சிப் ஆனதுடன் கட்சி பிரமுகர்களுக்கு உடனே தகவல் கொடுத்தனர். இந்து வந்து பிரச்சனைபண்றாங்க என்று..

இன்று மக்களுக்காக எகிறிய இந்து நாளையும் இதே மக்கள் பக்கம் நிற்பாரா என்ற கேள்வியுடன் சென்றனர் அப்பகுதி பெண்கள்.

admk elections
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe