



Published on 16/08/2021 | Edited on 16/08/2021
குடிசை மாற்று வாரியத்தின் மக்கள் விரோத நடைமுறைகளை மாற்றக்கோரி, குடிசைப்பகுதி மாற்று வாரிய அதிகாரிகளைச் சந்தித்து குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் நலக்கமிட்டியினர் மனு அளித்தனர்.
அதில், பழைய வீடுகள் இடிக்கும் முறை, மாற்று இடம், 1.50 லட்சம் பணம் கேட்கும் அரசாணை மற்றும் குடியிருப்புகளுக்கான பராமரிப்புக் கட்டணம் போன்ற பிரச்சனைகளை முன்வைத்து சேப்பாக்கம் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.