ADVERTISEMENT

வீட்டுக்கு வீடு மரக்கன்றுகள்... விவேக் லட்சியத்தை நிறைவேற்றும் இளைஞர்கள்!

08:49 AM Apr 18, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திரைப்பட நடிகராக மட்டுமின்றி சூழலியல் ஆர்வலராக தமிழக இளைஞர்களிடம் நன்மதிப்பை பெற்றவர் நடிகர் விவேக். 'கிரீன் கலாம்' என்ற திட்டத்தின் மூலம் சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை நட இளைஞர்களையும் மாணவர்களையும் அழைத்தார். தானாக முன்வந்து மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பவர்களை அடையாளம் கண்டு பாராட்டியும் உள்ளார். இப்படி தமிழக இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தரின் லட்சியமான 'கிரீன் கலாம்' திட்டம் முழுமையாக நிறைவேறும் முன்பே திடீரென அவரை மரணம் தழுவிக் கொண்டது.

நடிகர் விவேக்கின் மரணத்தை எதிர்பார்க்காத இளைஞர்கள் அவர் மண்ணுக்குள் போவதற்குள் அவரது 'கிரீன் கலாம்' லட்சியத்தை நிறைவேற்ற முனைந்தனர். யாரும் சொல்லாமலேயே தானாக முன்வந்து தமிழகம் முழுவது தங்கள் வீடு, தோட்டம், அலுவலகம், பொது இடங்கள் என கிடைத்த இடங்களில் எல்லாம் மரக்கன்றுகளை நட்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள ஆவணம் கிராமத்தில் ஒன்றிணைந்த இளைஞர்கள் 'கிரீன் கலாம்' 'கிரீன் விவேக்' என்ற புதிய திட்டத்தின் மூலம் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க திட்டமிட்டு முதல்கட்டமாக சமூக ஆர்வலர் அப்பாஸ் தலைமையிலான இளைஞர்கள் சுமார் 350 மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் கார், வேன், ஓட்டுநர்கள் விவேக் நினைவாக மரக்கன்று நட்டு அஞ்சலி செலுத்தினார்கள். கொத்தமங்கலத்தில் மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். புதுக்கோட்டையில் பெண்கள் குழந்தைகளும் மரக்கன்றுகளை நட்டனர்.

இந்த ஒரே நாளிலேயே விவேக் லட்சியத்தின் பாதியை கடந்துவிட்டனர். இன்னும் சில நாட்களில் அவரது 'கிரீன் கலாம்' திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டு 'கிரீன் விவேக்' திட்டமும் நிறைவேற்றப்படும். விவேக் உயிரோடு இருக்கும்போது அடையமுடியாத லட்சியத்தை அவரது ரசிகர்கள், அவரால் கவரப்பட்ட இளைஞர்கள் மூலம் நிறைவேற்றப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT