
சென்னை அயனாவரத்தில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை தலைமைச் செயலக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அயனாவரம் மேடவாக்கம் குட்டியப்பன் தெருவில் தனசேகர் என்பவர் வீட்டில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மொத்தமாக நான்கு தளங்கள் இந்த வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் வீட்டில் குடியிருந்தவர்கள் உடனடியாக வெளியேறினர். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
கீழ்பாக்கம், அண்ணா நகர் பகுதியிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீரை பீச்சி அடித்து தீயணைத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீட்டுக்குள் இருந்த சிலிண்டர் விடுதி சிதறியது. இதில் முதல் தளத்தில் பெருமளவில் சேதம் ஏற்பட்டு கட்டிடங்கள் இடிந்தது. இந்த விபத்தால் அருகிலிருந்த வீட்டின் கட்டிடங்களும் சேதமடைந்தது. இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித சேதமோ காயமோ ஏற்படவில்லை. ஆனால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. ஃப்ரிட்ஜில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அயனாவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)