அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே உள்ள முகப்பேர் கர்ணன் தெருவில் வசிப்பவர் நடராஜன் (53). இவர் பால் மற்றும் பூ வியாபராம் செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி (48). இவர் பூ வியபாரம் செய்து வந்தார். வியாழக்கிமை மதியம் 3.30 மணியளவில் நடராஜன், லட்சுமி ஆகியோர் வீட்டின் முதல் தளத்தில் உள்ள பால்கனியில் அமர்ந்து பூ கட்டிக் கொண்டிருந்தனர். அங்கு இவர்களது பேத்தி சிறுமி லட்சனா விளையாடிக் கொண்டிருந்தார்.

ACCIDENT

அப்போது பால்கனியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் நடராஜன், லட்சுமி, லட்சனா ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். ஆனால் தலையில் பலத்த காயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நடராஜனுக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. சிறுமி லட்சனாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் முகப்பேர் மேற்கு 3ஆவது பிளாக்கில் வசிக்கும் மகேஷ் (24) என்பவர் அந்த வழியாக மோட்டர் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது, அவர் மீதும் அந்த இடிபாடுகள் விழுந்ததில் அவரும் படுகாயமடைந்தார்.

Advertisment

ACCIDENT

Advertisment

சம்பவ இடத்திற்கு வந்த நொளம்பூர் காவல் துறையினர் காயமடைந்த நடராஜன், மகேஷ் ஆகியோரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பலியான லட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து வீட்டின் உரிமையாளர் உதயகுமார் (54) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.