Advertisment

மழையால் வீடு இடிந்து மூதாட்டி உயிரிழப்பு!

house- collapses- due to- rain

Advertisment

நேற்று இரவு பல்வேறு மாவட்டங்களில் பலத்த இடி மின்னலுடன் கடும் மழை பெய்துள்ளது. அதேபோன்று விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகிலுள்ள ஏனாதிமங்கலம் கிராமத்திலும் நேற்று இரவு கடும் மழை பெய்தது.

அந்த ஊரைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி சரோஜாவும் அவரது மகன் இளங்கோவன் என்பவரும் அவர்களுக்குச் சொந்தமான கூரை வீட்டில் வசித்து வந்தனர்.அந்த மழையின் போது இவர்கள் இருவரும் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்தனர். பலத்த மழையின் காரணமாக அவர்களின் கூரை வீடு இடிந்து விழுந்துள்ளது இதில் சிக்கி மூதாட்டி சரோஜா சம்பவ இடத்திலேயே இறந்து போய்விட்டார். அவரது மகன் இளங்கோவன் பலத்த காயம் அடைந்துள்ளார்.இடிபாடுகளில் சிக்கிய இருவரையும் ஊர் மக்கள் வெளியே கொண்டு வந்துள்ளனர். காயமடைந்தஇளங்கோவனை ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மழையின் காரணமாக நடைபெற்ற இந்தத் துயரச்சம்பவம் அந்தக் கிராம மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

rain Viluppuram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe