hotels and clubs tamilnadu government coronavirus prevention

Advertisment

தமிழகத்தில் கிளப், ஹோட்டல்கள் நாளை (01/09/2020) திறக்கப்படும் நிலையில், 'கிளப், ஹோட்டல்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

அதன்படி, "6 அடி தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற விதிகளை ஹோட்டல், கிளப்பில் பின்பற்ற வேண்டும். முகக்கவசம், கையுறை அணிதல் போன்ற விதிமுறைகளை ஹோட்டல் பணியாளர்கள் பின்பற்ற வேண்டும். ஹோட்டல், கிளப் வரவேற்பறையில் சானிடைசர் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். ஹோட்டல்களுக்கு வருவோரின் உடமைகள் உரிய முறையில் சுத்தம் செய்த பிறகே அறைகளுக்குச் கொண்டு செல்ல வேண்டும். ஹோட்டல்களில் அரசின் விதிகளைப் பின்பற்றி குளிர்சாதன வசதியைப் பயன்படுத்த வேண்டும். கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஹோட்டல்கள், கிளப் செயல்பட அனுமதி இல்லை". இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.