Hotel smashed for not having biryani ... Doubles arrested !!

பிரியாணி இல்லை என்று கூறியதற்காக இரட்டைச் சகோதரர்கள் பிரியாணி கடையை அடித்து நொறுக்கிய சம்பவம் கரூரில் நடந்துள்ளது. இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகளும்வெளியாகியுள்ளன.

Advertisment

கரூர், காந்திகிராமம் பகுதியில் உள்ள ஹோட்டலுக்குச் சென்ற கார்த்திக், யுவராஜ் என்ற இரட்டைச் சகோதரர்கள் பிரியாணி கேட்டுள்ளனர். ஆனால் பிரியாணி இல்லை எனக் கடை ஊழியர்கள் கூறியதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த இருவரும் இரவு நேரத்தில் கடையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை அடித்து உடைத்துசாலையில் வீசி சேதப்படுத்தியுள்ளனர். இந்தக் காட்சிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.ஹோட்டலின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

Advertisment