Advertisment

சூடு பிடித்த மாட்டுச் சந்தை...

cow mARKET

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

மாட்டுச் சந்தைக்கு பெயர் பெற்றது ஈரோடு மாட்டுச் சந்தை. ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை ஈரோடு கருங்கல்பாளையத்தில் மாட்டுச் சந்தை கூடும். இங்கு கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் நேரில் வந்து மாடுகளை விற்பனை செய்வதும் விலைக்கு வாங்கிச் செல்வதும் வழக்கம். கடந்த இரண்டு மாதங்களாக மாட்டுச் சந்தை கலைஇழந்து காணப்பட்டது. அதற்கு காரணம் பெருமழை, வெள்ளம், கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு இதனால் மாடுகளை வாங்கிச் செல்லும் வியாபாரிகள் சந்தைக்கு வரவில்லை. தற்போது வெள்ளப் பாதிப்பு சீரடைந்ததோடு கேரளாவில் இயல்பு நிலைதிரும்பியுள்ளது. இதனால் இன்றைய ஈரோடு மாட்டுச் சந்தைக்கு கேரளா உட்பட வெளிமாநில வியாபாரிகள் பெருமளவில் வந்திருந்தனர். வியாபாரம் சூடு பிடித்தது. ஆயிரக்ககணக்கான மாடுகள் சுமார் இரண்டு கோடிக்கு மேல் விற்பனையானது.

Advertisment
Erode Market cows
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe