Advertisment

தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிக்கை விடுத்தவர்கள் மீது தாக்குதல்; பாஜக பிரமுகர் கைது

hosur sundarasudeswarar temple issue

தமிழில் குடமுழுக்கு நடத்தக்கோரிக்கை விடுத்தவர்கள் மீதுதாக்குதல் நடத்திய பாஜக பிரமுகர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில்பிரசித்தி பெற்ற சந்திரசூடேசுவரர் மலைக் கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள பக்தர்கள் வந்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் சந்திரசூடேசுவரர் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கு விழாவைத்தமிழில் நடத்தக் கோரி தமிழ்த்தேசியப் பேரியக்கத்தினர் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து குடமுழுக்கு விழாவைத்தமிழில் நடத்தக் கோரிக்கை வைத்தவர்கள் மீது மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Advertisment

அதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பாஜக ஐ.டி பிரிவுமாவட்டத் தலைவர்மஞ்சுநாத் (வயது 42) மற்றும் வினோத் (வயது 32) உள்பட இருவரைக் கைது செய்தனர். மேலும் பாஜக மற்றும் வி.எச்.பி. அமைப்பைச் சேர்ந்த தலைமறைவாக இருக்கும் மூவரை போலீசார் தீவிரமாகத்தேடி வருகின்றனர்.

Hosur police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe