ஓசூர் அருகே, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கழுத்தை அறுத்துக் கொலை செய்து, சடலத்தை முள்புதரில் வீசிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள பொம்மாண்டபள்ளியில் சாலையோரம் உள்ள ஒரு முள்புதரில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மத்திகிரி காவல்நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை (பிப். 11) தகவல் அளித்தனர்.

Advertisment

hosur near odisha younger incident police investigation

சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல்துறையினர், சடலத்தைக்கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல்கட்ட விசாரணையில் அந்த வாலிபர் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கொலையுண்ட இளைஞர், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திபுகர்கரே என்பதும், மூன்று மாதங்களுக்கு முன்பு பொம்மாண்டபள்ளி கிராமத்திற்கு வந்து, அங்கேயே கூலி வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.

Advertisment

கடந்த பிப். 10ம் தேதி இரவு அவரும், நண்பர்களும் மது குடித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் திபுகர்கரே, கழுத்தும் அறுத்தும், கல்லால் தாக்கியும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர். சந்தேகத்தின்பேரில் திபுகர்கரேயின் நண்பர்கள் இரண்டு பேரை பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.