hosur husband and wife police investigation

ஓசூரில், செல்ஃபோனில் விடிய விடிய அரட்டை அடித்த மனைவியைக் கத்தியால் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisment

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30). கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

Advertisment

இவருடைய மனைவி சிந்துஜா (27). இவர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஓசூர் நாராயண நகர் அடுக்குமாடி குயிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

கடந்த சில மாதங்களாகவே கணவன் மனைவிக்குள் அடிக்கடி கருத்து மோதல் ஏற்பட்டு வந்தது. மேலும், மனைவியின் நடத்தையில் மணிகண்டனுக்கு சந்தேகம் எழுந்தது. அக்., 13- ஆம் தேதியன்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த மணிகண்டன், கத்தியால் சிந்துஜாவின் கழுத்தை ஆட்டை அறுப்பதுபோல் அறுத்து கொடூரமாகக் கொலை செய்தார். சம்பவத்திற்குப் பிறகு மணிகண்டனே ஹட்கோ காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றினர். உடற்கூறாய்வுக்காக சடலம், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மணிகண்டனையும் கைது செய்தனர்.

காவல்துறையில் மணிகண்டன் அளித்த வாக்குமூலத்தில், ''கடந்த சில மாதங்களாகவே சிந்துஜா யாரோ சில ஆண்களுடன் அடிக்கடி செல்ஃபோனில் பேசி வந்தார். மனைவிக்கு சிலருடன் தவறான தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகம் ஏற்பட்டது. அதனால் இனிமேல் யாரிடமும் செல்ஃபோனில் பேசக்கூடாது என்று சிந்துஜாவுக்கு தடை விதித்தேன். அப்போதும் அவர் பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து விடிய விடிய செல்ஃபோனில் பலருடன் அரட்டை அடித்து வந்தார்.

Ad

மேலும், என்னையும், என் பெற்றோரையும் மரியாதைக் குறைவாகப் பேசினார். இந்த நிலையில்தான், எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. என் மனைவி இனியும் உயிருடன் இருந்தால் எனக்கு மன உளைச்சல் கொடுத்துக் கொண்டே இருப்பார் என்பதால் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தேன்,'' என தெரிவித்துள்ளதாக காவல்துறையினர் கூறினர்.