Advertisment

யானை உயிரிழப்பு; அதிமுக கவுன்சிலரிடம் விசாரணை

hosur elephant incident forest department enquiry for admk counsilor

பெண் யானை உயிரிழந்தது தொடர்பாக அதிமுக கவுன்சிலரிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் அதிமுகவைச் சேர்ந்த பால் நாராயணன்என்பவர் வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். இவருக்கு ஓசூர் அருகே உள்ள தாவரகரை என்ற கிராமப் பகுதியில் சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த சூழலில் அதிமுக கவுன்சிலர் பால் நாராயணன் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கோழிப் பண்ணையில் ஆழ்துளை கிணற்றுக்காக ஏற்படுத்தப்பட்ட மின்சார மோட்டாரில் பாதுகாப்பு இல்லாமல் வயர்கள் கீழே கிடந்துள்ளன.

Advertisment

இந்நிலையில் இங்கு நேற்றிரவு கூட்டமாக வந்த 10 யானைகளில் இருந்த 8 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று இந்த வயர்களை கடித்து உயிரிழந்துள்ளதாகத்தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிமுக கவுன்சிலர் பால் நாராயணனிடம் பெண் யானை உயிரிழந்தது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண் யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

admk elephant Hosur Krishnagiri
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe