கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்தவர் மன்சூர். ரியல் எஸ்டேட் அதிபரான இவரை 02.02.2020 தேதி இரவு 7 மணிக்கு ஓசூர் காமராஜ் காலனி விளையாட்டு மைதானத்தில் மர்மகும்பல் சரமரியாக வெட்டி கொலை செய்துள்ளது.

Advertisment

Hosur

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

பிரபல ரவுடி ஜான் பாஷாவின் வலது கையாக செயல்பட்டு வந்தவர் மன்சூர் அலி. ஜான்பாஷாவுக்கும் மன்சூருக்கும் இடையே பணம் ரீதியாக மனகசப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜான் பாஷா 2014ல் படுகொலை செய்யப்பட்டார். அவர் பல பேரிடம் பல கோடியை கொடுத்து வைத்திருந்தார். அது மன்சூருக்கு மட்டுமே தெரிந்த நிலையில் அந்த பணத்தை முழுவதையும் தன்னுடைய வசம் கொண்டுவந்துள்ளார்.

இந்த நிலையில் தான் 2014ல் ரயில் நிலையத்தில் நடை பயிற்சி சென்றபோது கடத்தி குத்தி கொலை செய்யப்பட்டனர். அதே போலவே தற்போது மன்சூர் அலியும் காமராஜ் விளையாட்டு மைதானத்தில் நடை பயிற்சி சென்றபோது மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி சாய்த்தனர். இவர் திமுகவின் மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஆவார்.

Advertisment

இந்த கொலை தொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.