hospital statement about spb health

எக்மோ, வெண்டிலேட்டர் உதவியுடன் பாடகர் எஸ்.பி.பி.க்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisment

கரோனா தோற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து, அவரது மகன் சரண் தினமும் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து தகவல்களை வெளியிட்டு வருகிறார்.

Advertisment

இந்நிலையில் எஸ்.பி.பி உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை சீராக உள்ளது. எக்மோ, செயற்கை சுவாசம் ஆகியவற்றின் உதவியுடன் அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அவரது குடும்பத்தினருக்கு அவ்வப்போது தெரிவிக்கப்பட்டு வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.