/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a3126.jpg)
நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாவேஉடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவரும்நிலையில், கடந்த நவம்பர் 18 ஆம் தேதி காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம் அவரின் உடல்நிலை குறித்து விளக்கமளித்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a3127.jpg)
நடிகர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து மியாட் மருத்துவமனையால்வெளியிடப்பட்டுள்ளஅறிக்கையில், 'காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைத்து வருகிறார். அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. அவரின் அனைத்து உடல் செயல்பாடுகளும் நிலையாக உள்ளது. இன்னும் சில நாட்களுக்கு மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு விஜயகாந்த் வீடு திரும்புவார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)