/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/b59.jpg)
தமிழ்சினிமாவில்முன்னணி நடிகராக இருக்கும்விக்ரமிற்குதிடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவிக்ரமிற்குமருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் விரைவில் விக்ரம்குணமடையபிரார்த்தனை செய்து வருகின்றனர்.
விக்ரம் உடல்நலம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகிய நிலையில் அவரின் மேலாளர்சூர்யநாராயணன்தனதுட்விட்டர்பக்கத்தில் அன்பான ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு,சியான்விக்ரமிற்குலேசான மார்பு அசௌகரியம் இருந்தது. இது தொடர்பாகஅவருக்குசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. விக்ரம் தற்போது நலமாக இருக்கிறார். இன்னும் ஒரு நாளில் அவர் மருத்துவமனையிலிருந்துடிஸ்சார்ஜ்செய்யப்படவுள்ளார்'எனக்குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பெற்றுவரும் காவேரி மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் நடிகர்விக்ரமிற்குமாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்ற தகவலை மறுத்துள்ளமருத்துவமனை நிர்வாகம், அவர் நலமுடன் உள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)