Skip to main content

அமைச்சர் சொன்ன பிறகும் மருத்துவமனை திறக்கவில்லை. போராட்டம் நடத்தியவர்கள் கைது!

Published on 10/07/2018 | Edited on 10/07/2018

புதுக்கோட்டையில் 1851 ம் ஆண்டு தொண்டைமான் மன்னர்களால் தொடங்கப்பட்ட பொது மருத்துவமனை பின்னர் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் பெயரால் இயங்கி வந்தது. அதே காலக்கட்டத்தில் தொண்டைமான் மன்னரால் பிரசவத்திற்கு என்று வடக்குராஜ வீதியில் ராணியார் மகப்பேறு மருத்துவமனையையும் கட்சி சேவை செய்து வந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சை மாவட்டங்களில் இருந்தும் மகப்பேறுக்காக ராணியார் மருத்துவமனைக்கு வருவது வழக்கம். 


 

The hospital did not open up after the minister. We have arrested Tamil Tamils ​​arrested


 

அதே போல பொது மருத்துவத்திற்காக தினசரி ஆயிரம் பேர் மாவட்ட தலைமை மருத்துவமனையாக இருந்த முத்துலெட்சுமி ரெட்டி மருத்துவமனைக்கு வந்து சென்றனர். பேருந்து நிலையம் அருகில் இந்த மருத்துவமனை அமைந்துள்ளதால் நோயாளிகளுக்கு வசதியாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறக்கப்பட்டதால் மாவட்ட தலைமை மருத்துவமனை, மற்றும் ராணியார் மகப்பேறு மருத்துவமனைகளை பூட்டிவிட்டனர். அதனால் நோயாளிகள் 5 கி.மீ. தனி பேருந்தில் செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அதனால் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மருத்துவமனை மற்றும் மகப்பேறு மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் கோரிக்கை வைத்து போராடினார்கள்.


 

The hospital did not open up after the minister. We have arrested Tamil Tamils ​​arrested


 

அதன் பிறகு மருத்துவமனை தொடர்ந்து செயல்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். ஆனால் இதுவரை மருத்துவமனை மீண்டும் திறக்கப்படவில்லை. ஆனால் மருத்துவமனையில் இருந்த தளவாட பொருட்களை ஏற்றிச் சென்றுவிட்டனர். இந்த நிலையில் புற்றுநோய் கண்டறியும் மையம் தொடங்க தொடக்விழா நடத்தப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது. அதற்கான பணிகளும் நடக்கவில்லை.
 

இந்த நிலையில் அமைச்சர், மற்றும் சுகாதரா செயலாளர் மருத்துவமனை திறக்கப்படும் என்று சொன்ன பிறகும் ஏன் இன்னும் திறக்கவில்லை என்று நாம் தமிழர் கட்சி நுழைவாயிலில் உண்ணாவிரப் போராட்டம் நடத்த அனுமதி கேட்டனர். ஆனால் போலிசார் அனுமதி மறுத்த நிலையில் மருத்துவமனை வளாகத்தில் போலீசாரை குவித்திருந்தனர். இன்று செவ்வாய் கிழமை மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ஜெயசீலன் தலைமையில் திரண்ட நாம் தமிழர் கட்சியினர் திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் அமர்ந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றிச் சென்றனர்.


 

The hospital did not open up after the minister. We have arrested Tamil Tamils ​​arrested


 

வேனில் செல்லும் போது ஒரு போலீசாருடன் வாக்குவாதம் எற்பட்ட நிலையில் அதை ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்ததை போலீசார் தடுக்க முயன்ற போது நகரச் செயலாளர் ஈஸ்வரனின் மர்ம உறுப்பில் தாக்கப்பட்டு மயக்கமடைந்து வலியால் துடித்தார். அதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூட இருந்தவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் மருத்துவரை அழைத்து வந்து சிகிச்சை அளித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

சார்ந்த செய்திகள்